தமிழகத்தில் ஜூன் 10, 11ஆம் தேதி பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை: தமிழகத்தில் வரும்  10-ஆம் தேதி சில மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை  வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது. 11ந்தேதி  தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவலில்,  தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, வரும் 10ந்தேதி முதல் 12ந்தேதி வரை, தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் இடியுடன் … Read more

“1.35 நிமிடத்தில் 52 பிராமி எழுத்துகள், உதடு ஒட்டாத திருக்குறள்..'' – அசத்திய கரூர் சிறுமிகள்

பிராமி எனப்படுவது பழமையான தமிழ் எழுத்து முறையாகும். இவற்றை தமிழி எழுத்துகள் என்றும் கூறுவார்கள். இந்த எழுத்துகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. நாம் இன்றைய காலகட்டத்தில் எழுதும் தமிழ் எழுத்து முறைக்கு முன்னோடி எழுத்துமுறை தான் இந்த பிராமி எழுத்துகள். இப்போது இருக்கும் டெக் உலக காலத்தில் இது போன்ற பழமையான தமிழ் எழுத்து வடிவங்களை எழுதுபவர்கள் குறைவு. இருப்பினும் சிறுவயதிலிருந்தே இந்த பழமையான தமிழ் எழுத்துக்களை எழுதி அசத்தி வருகிறார்கள் கரூரை சேர்ந்த சிறுமிகள். … Read more

‘தமிழகத்தில் நிகழும் குற்றங்களை காவல்துறை கட்டுப்படுத்தவில்லை’ – ஜி.கே.வாசன் விமர்சனம்

திருப்பூர்: தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் புழக்கம் சமூகத்தில் அதிகரித்துள்ளது. எவ்வித கட்டுப்பாட்டையும் ஏற்படுத்த காவல்துறையால் முடியவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன், பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூர் வந்த நிலையில் இன்று (ஜூன் 7) செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை … Read more

பிஹார்: சாலை விபத்தில் உயிர் தப்பிய எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிஹாரின் வைஷாலி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிஹாரின் மாதேபுராவில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தேஜஸ்வி யாதவ், அங்கிருந்து சாலை மார்க்கமாக கட்சி செய்தித் தொடர்பாளர் சக்தி யாதவ் ஆகியோருடன் தேசிய நெடுஞ்சாலை 22 இல் திரும்பிக் கொண்டிருந்தார். வைஷாலி மாவட்டத்தின் ஹாஜிபூரில் இன்று (ஜூன் 7) அதிகாலை 1:30 மணிக்கு, தேநீர் அருந்துவதற்காக அவரது … Read more

புதிய அணு சக்தி நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது பிரான்ஸ்: அமெரிக்க ராணுவம் அதிர்ச்சி

வாஷிங்டன்: ‘டி கிராசே’ என்ற அதி நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ளது, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடு பிரான்ஸ். இது சமீபத்தில் அறிமுகம் செய்த அணு சக்தி நீர் மூழ்கி கப்பல் ‘டி கிராசே’. பிரான்ஸ் கடற்படையில் ஏற்கெனவே உள்ள ரூபிஸ் வகை நீர்மூழ்கி கப்பல்களை 2030-ம் ஆண்டுக்குள் மாற்றும் வகையில் 10 பில்லியன் யூரோ மதிப்பில் ‘பராகுடா’ என்ற … Read more

500 ரூபாய் நோட்டுக்கும் தடையா…? அதுவும் 2026 மார்ச் முதலா…? மத்திய அரசு அப்டேட்!

500 Rupees Notes: வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில் மத்திய அரசு அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் போட்டி விளையாடுவார் – ஆஸி பிளேயர் சொன்ன முக்கிய தகவல்

Virat Kohli retirement Update : இந்தியாவின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றதாக அவர் அறிவித்ததில் இருந்து ரசிகர்கள் இன்னும் அதிர்ச்சியில் உள்ளனர். ஏனென்றால், விராட் கோலி 10,000 டெஸ்ட் ரன்களுக்கு மிக அருகாமையில் இருக்கிறார். அப்படி இருக்கும் சமயத்தில் அவர் திடீரென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். விராட் கோலி இந்தியாவுக்காக … Read more

ஜியோ பயனர்களுக்கு குட் நியூஸ்.. 20 ஜிபி டேட்டா, ஜியோ ஹாட்ஸ்டார் இலவசம்

Jio 20GB Extra Data Plan: ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்காக அவ்வபோது பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 46 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது ஜியோ நிறுவனம் தற்போது மிகச்சிறந்த திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதில் ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு 20 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்கும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. பெரும்பாலான பயனர்கள் இணையத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிக இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஜியோ ஒரு … Read more

வைகை அணையில் இருந்து வரும் 15-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு!

மதுரை:  தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில், வைகை அணையில் இருந்து வரும் 15-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் 5 மாவட்ட விவசாயிகள் பலன் பெறுவர். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், கடந்த இரு வாரங்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன், அணைகளிலும் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இந்த … Read more

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

 சுயநலத்தைத் துறந்து, சகவாழ்வின் மகத்துவத்தை உணர்ந்து, ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் நம் நாட்டிலும் உலகெங்கிலும் பரவி வாழும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் இன்று ஹஜ் பெருநாளை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறார்கள்.