மீண்டும் பரவும் கொரோனா: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு தயார்…

சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கி உள்ள நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு தயாராக இருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும்  பரவி வரும் நிலையில், சென்னை உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் கொரோனா வார்டை தயாராக வைத்திருக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில்,  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என … Read more

Doctor Vikatan: அதிகம் சாப்பிட முடியாத நிலை, 'வயிறு சுருங்கிடுச்சு..' என்பது சாத்தியமா?

Doctor Vikatan: குறைவாக சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு ஒரு கட்டத்தில் அதுவே பழகிவிடுகிறது. ஆசைப்பட்டாலும் அதற்கு மேல் அதிகமாக சாப்பிட முடிவதில்லை. ‘வயிறு சுருங்கிடுச்சு…’ என்று சொல்கிறோம். வயிறு சுருங்க வாய்ப்பு உண்டா….? எத்தனை நாள்களில் வயிறு சுருங்க ஆரம்பிக்கும்… வயிறு சுருங்குவதைப் போலவே, அதிகம் சாப்பிடுவோருக்கு வயிறு விரிய வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் … Read more

மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல்

தாம்பரம் / திருவள்ளூர் / மதுராந்தகம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாம்பரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்பாக்கம் ஏரியில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தூய்மைப்படுத்துதல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில … Read more

நாடு முழுவதும் சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளிகள் 4,866 ஆக உயர்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் புதிதாக 564 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு உருமாற்றம் பெற்ற எல்எப்.7, எக்ஸ்எப்ஜி, ஜேஎன்.1 ஆகிய புதிய வைரஸ்களும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட என்பி.1.8.1 என்ற துணை திரிபும் காரணமாக உள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரப்படி நேற்று காலை 8 மணி வரையிலான 24 … Read more

‘நன்றி இல்லாதவர்’… ட்ரம்ப் – எலான் மஸ்க் நட்பு முறிவும், பரஸ்பர சாடல்களும்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் – தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். “எலான் மஸ்க் உடன் எனக்கு சிறந்த நட்பு ரீதியிலான உறவு இருந்தது. ஆனால், இனியும் நாங்கள் அப்படி இருப்போமோ, இதை தொடருவோமோ என எனக்கு தெரியவில்லை. மஸ்க் மீது நான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என ‘தி ஓவல்’ அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது அதிபர் … Read more

உங்கள் ஸ்மார்ட்போனை மாற்ற வேண்டிய 3 முக்கிய அறிகுறிகள்

smartphone replace signs : ஸ்மார்ட்போன் இன்று வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டது. தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்தி அனுப்புவதற்கு மட்டுமல்லாமல், வங்கி பரிவர்த்தனைகள், ஆன்லைன் பேமெண்ட், டாக்சி புக் செய்தல், உணவு ஆர்டர் செய்தல் போன்ற அன்றாட பணிகளுக்கும் இது தேவைப்படுகிறது. ஆனால், நீண்ட காலமாக ஒரே ஃபோனைப் பயன்படுத்தி வருகிறீர்களா? அப்படியானால், அதை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதா என்பதை இந்த 3 அறிகுறிகள் மூலம் அறியலாம். 1. மென்பொருள் (Software) மேம்படுத்தல்கள் இல்லாதது பல மொபைல் … Read more

தக் லைஃப் திரைப்படம் இணைத்தில் வெளியீடு : படக்குழு அதிர்ச்சி

சென்னை நேற்று வெளியான தக்லைஃப் திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது/ ‘தக் லைப்’ படம் ரிலீஸாவதற்கு 2 நாட்கள் முன்பாக, தயாரிப்பாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டு அதில், மிகப்பெரிய பொருட்செலவில் உருவான ‘தக் லைப்’ திரைப்படம் இணையதளங்களில் வெளியானால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் ‘தக் லைப்’ திரைப்படம் இணையதளங்களில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. ‘ தக் லைப்’ படத்தை இணையத்தில் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா ? கம்பீர் விளக்கம்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இந்த தொடரின் 5 போட்டிகளிலும் பும்ரா விளையாட … Read more

Health: கரும்பு ஜூஸை ஃபிரிட்ஜில் வைத்துக் குடிக்கலாமா? – டயட்டீஷியன் தரும் எச்சரிக்கை

வெயில் காலம் ஆரம்பித்தவுடனே அனைவரும் அருந்தும் பானம் கரும்பு ஜூஸ். கைப்பிடி ஐஸ் கட்டிகளை கரும்பு ஜூஸில் போட்டுவிட்டால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ரொம்ப பிடித்துவிடுகிறது இந்த ஜூஸை… தற்போது, பகலெல்லாம் வெயில், இரவுகளில் மழை என்று இருந்தாலும், வெயில் நேரத்தில் கரும்பு ஜூஸையே பலரும் நாடிக்கொண்டிருக்கிறார்கள். கரும்பு ஜூஸ் குடிப்பதற்கு முன்னால் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களின் இந்த எச்சரிக்கை டிப்ஸைப் படித்து விடுங்கள். கரும்பு ஜூஸ் *பொங்கல் நேரத்தில் வரும் ஊதா … Read more

கிளாம்பாக்கம் நிலையத்தில் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் சாலை மறியல் – நடந்தது என்ன?

கிளாம்பாக்கம்: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நேற்று முன் தினம் இரவுக்கு மேல் இல்லாததால், 1,000-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பயணிகள் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் போதுமான எண்ணிக்கையில் … Read more