இங்கிலாந்தை வீழ்த்த கில்லுக்கு இருக்கும் ஒரே துருப்புச்சீட்டு இந்த பிளேயர் தான் – ரஹானே

Ajinkya Rahane, India vs England Test : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் சுப்மன் கில் ஆகியோரை முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் கடுமையாக விமர்சிக்கிறனர். முதல் டெஸ்ட் போட்டியின்போது பந்துவீச்சில் சரியான திட்டமிடல் இல்லை, பீல்டிங் படுமோசம், பவுலிங் ரொட்டேசன் சரியில்லை என வறுத்து எடுக்கின்றனர். இந்த சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் … Read more

பி.எம். கிசான் 20வது தவணை : மொபைல் எண்ணை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி

PM Kisan mobile number update : பிஎம் கிசான் 20வது தவணைத் தொகை விரைவில் வெளியாக இருக்கிறது. நாடு முழுவதும் இதற்கான பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இம்முறை வேளாண் அடுக்க எண் பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 ஆம் தேதிக்கும் விவசாயிகள் வேளாண் அடுக்க எண்ணுக்கு விண்ணப்பித்து பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத் துறை அலுவலகத்துக்கு விவசாயிகள் ஆவணங்களுடன் நேரில் … Read more

திமுக அரசுக்கு எதிராக  கும்பகோணத்தில் ஜுலை 4ந்தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் !  எடப்பாடி அறிவிப்பு

சென்னை: திமுக அரசுக்கு எதிராகவும், கும்பகோணம் மாநகராட்சியை கண்டித்தும் ஜுலை 4ந்தேதி அதிமுக சார்பில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில்,  ஜுலை 4ந்தேதி (4.7.2025 வெள்ளிக் கிழம)  காலை 9.30 மணி அளவில், கும்பகோணம் காந்தி பார்க் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக … Read more

செல்போனில் ஆபாச வீடியோ… கண்ணை மறைத்த கள்ளக்காதல்… மாமியாருடன், மருமகன் ஓட்டம்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் முத்தேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சாந்தா (வயது 55). இவர் நாகராஜின் 2-வது மனைவி ஆவார். நாகராஜின் முதலாவது மனைவி இறந்ததால், சாந்தாவை அவர் 2-வதாக திருமணம் செய்தார். முதல் மனைவிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் நாகராஜின் மூத்த மகள் ஹேமாவுக்கும், அவருடைய தங்கை மகன் கணேசுக்கும் (25) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு … Read more

விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் லுகா நார்டியுடன் மோதும் நம்பர் 1 வீரர்

லண்டன், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நாளை மறுதினம் லண்டனில் தொடங்குகிறது. ஜூலை 13-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெற முன்னணி வீரர், வீராங்கனைகள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொடரில் யார்-யாருடன் மோதுவது என்பது நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் 1’ வீரர் இத்தாலியின் ஜானிக் சின்னர் தனது முதல் சுற்றில் சக நாட்டவரான லுகா நார்டியை சந்திக்கிறார். முன்னணி வீரரான … Read more

கனடாவுடன் வர்த்தக பேச்சு இனி கிடையாது: அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வர்த்தகம் மற்றும் இறக்குமதி விவகாரத்தில் டிரம்ப் கடும் கெடுபிடிகளை காட்டி வருகிறார்.அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்க கூடிய கனடாவுக்கும் வர்த்தக பேச்சு விவகாரத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.கனடவை அமெரிக்காவின் மற்றொரு மாகாணம் என்று கூட பேசி அந்நாட்டை டிரம்ப் சீண்டியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் மீது கூடுதல் வரியை கனடா விதித்தது. … Read more

BJP: "விசிகவுக்கு எத்தனை தொகுதி கொடுப்பாங்கன்னு முதல்வர்ட்ட கேப்பீங்களா?" – நயினார் நாகேந்திரன்

‘நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு!’ பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவர் பேசியிருந்தார். நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, “ஊடகங்கள் எங்களின் கூட்டணியைப் பற்றி மட்டும் பேசுகிறீர்கள். விசிகவுக்கு எத்தனை சீட்டுகள் கொடுப்பீர்கள் என முதல்வரிடம் கேட்கிறீர்களா? மதிமுகவுக்கு மனமாற்றம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. திமுக தமிழகத்துக்கு … Read more

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 26,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 73,452 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 26,000 கன அடியாக திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் உரிய நாளான ஜூன் 12-ம் தேதி தமிழக முதல்வர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார். தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் தேவையின் காரணமாக நீர் … Read more

அந்தமான் நிக்கோபரில் 4.6 ரிக்டரில் நிலநடுக்கம்

புதுடெல்லி: அந்தமானில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் நேற்று இரவு 8.28 மணியளவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ அந்தமான் நிக்கோபர் தீவின் போர்ட்பிளேயரில் இருந்து 254 கிமீ தென்கிழக்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் அட்சரேகை 9.75°N மற்றும் தீர்க்கரேகை 94.06°E ஆக இருந்தது. கடலுக்கு அடியில் 25 கிலோமீட்டர் … Read more

காசாவில் ஒரு வாரத்தில் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

வாஷிங்டன்: காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதலில் ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காங்கோ-ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நெருங்கிவிட்டதாக தான் நம்புவதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். இது குறித்து வெள்ளை மாளிகையில் அவர் பேசுகையில், “இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன். சம்பந்தப்பட்ட சிலரிடம் நான் இப்போதுதான் … Read more