அகஸ்தியர், சொரிமுத்து அய்யனார் கோயிலில் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் தடை

மதுரை: அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியில் புகழ் பெற்ற அகஸ்தியர் திருக்கோயில் மற்றும் சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்கள் உள்ளன. அகஸ்தியர் கோயிலின் அருகே அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு: ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததற்காக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். ஜெய்சால்மரில் உதவி நிர்வாக அதிகாரியாக இருந்த ஷகூர் கான், முக்கியமான ஆவணங்களை ஐஎஸ்ஐ ஏஜென்டுகளுக்கு அனுப்பிய புகாரில் கைதாகியுள்ளார் ஜெய்சால்மரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த ஷகூர் கான் என்பவரை, உளவு பார்த்த கடுமையான குற்றச்சாட்டில் ராஜஸ்தான் உளவுத் துறை கைது செய்தது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ முகவர்களுடன் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் … Read more

ஈ சாலா கப் நம்து: நிறைவேறிய 18 வருட கனவு.. பஞ்சாப்பை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!

2025 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று (ஜூன் 03) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதன். இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஃபில் … Read more

மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! ஒரேநாளில் நடைபெற்ற 8 கொலை சம்பவங்கள் குறித்து அன்புமணி விமர்சனம்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்  என்று விமர்சித்தள்ள பாமக தலைவர் அன்புமணி,   ஒரேநாளில் நடைபெற்ற 8 கொலை சம்பவங்கள்  நடைபெற்றதை கடுமையாக கண்டித்துள்ளதுடன்,  தமிழ்நாட்டில்,  சட்டம் – ஒழுங்கு அதலபாதாளத்தில் விழுந்துள்ளது என்று கூறி உள்ளார். தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் பல இடங்களில் கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.  நேற்று மட்டும்  8 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் … Read more

கேரளாவில் 10 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி: கடவுளின் பரிசுகளை நிராகரிப்பது பாவம் என சிரித்தபடியே கூறும் ரம்யா..!

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கண்ணூர் போடூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 44). இவருடைய மனைவி ரம்யா (37). இவர்களுக்கு மொத்தம் 10 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 8 பேர் பெண் குழந்தைகள், 2 பேர் ஆண் குழந்தைகள் ஆவர். 9 குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். முதலாவது மகளான அல்பியா 12-ம் வகுப்பு வகுப்பு படிக்கிறாள். இரண்டாவது மகள் ஆக்னஸ் மரியா 10-ம் வகுப்பும், மூன்றாவது மகள் ஆன் கிளேர் 8-ம் வகுப்பும் படிக்கின்றனர். இவர்கள் 3 பேரும் … Read more

காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல் – 27 பேர் பலி

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

RCB : 'கனவெல்லாம் பலிக்குதே..' – கோலியின் கையில் ஐ.பி.எல் கோப்பை! – கொண்டாடுங்க ரசிகர்களே!

ஆர்சிபி ரசிகர்களின் இத்தனை ஆண்டு ஏக்கமும் முடிவுக்கு வந்திருக்கிறது. அத்தனை கேலிகளையும் கிண்டல்களையும் விமர்சனங்களையும் தாண்டி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. கோலியின் கையில் சிக்காமல் இருந்த அந்த ஐ.பி.எல் கோப்பை இப்போது சிக்கியிருக்கிறது. Virat Kohli – RCB vs PBKS கோலி இந்த அணிக்காக அவ்வளவு உழைத்திருக்கிறார். ஆனால், அதற்கான பலனை அறுவடை செய்யாமலே இருந்தார். இதோ இப்போது அந்த சம்பவம் நடந்துவிட்டது. கோலியின் கையில் இதோ அந்த ஐ.பி.எல் கோப்பை … Read more

வாணியம்பாடியில் 8 பேர் உயிரிழந்த விவகாரம்: தனியார் பல் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பல் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் அறிவரசன் என்பவர் பல் மருத்துவமனையை நடத்தி வந்தார். இந்த மருத்துவமனையில் கடந்த 2023-ம் ஆண்டு பல் வலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அடுத்த 6 மாதங்களில் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில், கடைசியாக … Read more

“ட்ரம்ப் அழைத்தார்… மோடி சரணடைந்தார்!” – ராகுல் காந்தி விமர்சனம்

போபால்: இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த மோதலின்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்துப் பேசியதும் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்துவிட்டார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடந்த காங்கிரஸ் தொண்டர்கள் மாநாட்டில் உரையாற்றிய ராகுல் காந்தி, “நாட்டில் தற்போது சித்தாந்தப் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் காங்கிரஸும் அரசியலமைப்பும் இணைந்து நிற்கின்றன. மறுபுறம் அரசியலமைப்பை முடிவுக்குக் கொண்டுவர விரும்பும் பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் உள்ளன. படிப்படியாக … Read more

ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் ராஜ்யசபா தொடர்பாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் இப்போதே தங்களது தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. பூத் கமிட்டி அமைப்பது, மக்களை சந்திப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என அடுத்தடுத்த பணிகளில் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. ஏற்கன திமுக கூட்டணி கட்சிகள் அக்கட்சியுடன் தொடர்ந்து வரும் நிலையில், அதிமுக கூட்டணியின் … Read more