`இந்தித் திணிப்புக்கு எதிராக…'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தாக்கரே சகோதரர்கள்!

மகாராஷ்டிரா பள்ளிகளில் நடப்பு ஆண்டு முதல் 1-5வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி அறிமுகம் செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. இதற்கு கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து மூன்றாவதாக ஒரு மொழி உண்டு என்றும், அதில் இந்தி கட்டாயம் படிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், வேறு மொழியையும் படிக்கலாம் என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. நடப்பு ஆண்டிலேயே மும்மொழி திட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. ஆனால் அதற்குறிய பாடப்புத்தகங்கள் … Read more

சிறுவன் கடத்தல் சம்பவம் – பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை; ஐகோர்ட்டில் காவல்துறை வாதம்

சென்னை: “சிறுவன் கடத்தல் சம்பவத்தில் பூவை ஜெகன்மூர்த்தி மூளையாக செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எனவே, அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்.” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் பூவை ஜெகன்மூர்த்தி கைதாவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கு பின்னணி என்ன? திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ … Read more

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: இந்திய நிலைப்பாட்டை சீனாவிடம் மீண்டும் வலியுறுத்திய ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டான் ஜுனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிபட தெரிவித்தார். சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டான் ஜூன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக … Read more

விரைவில் இந்தியா – அமெரிக்கா இடையே மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்: டொனால்டு ட்ரம்ப்

வாஷிங்டன்: இந்தியா – அமெரிக்கா இடையே மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டொனால்டு ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு, அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதன் அறிகுறி என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளை மாளிகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், “நாங்கள் சில சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம். … Read more

திமுக கூட்டணியில் பாமக..? செல்வப்பெருந்தகை பதில்!

பாமக நிறுவனர் ராமதாசை காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவர் செல்வபெருந்தகை நேரில் சந்தித்த பின், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.  

பும்ராவை மட்டும் நம்ப முடியாது… இந்திய அணியில் 'சிஎஸ்கே' பௌலர் – பக்கா பிளான் ரெடி!

India vs England Test: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 24ஆம் தேதி நிறைவடைந்தது. அதில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.  ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரில் (Anderson Tendulkar Trophy Series) இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்னும் நான்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ், ஓல்ட் டிராஃபோர்ட், ஓவல் மைதானங்களில் அடுத்தடுத்து … Read more

SJ Surya's KILLER: 10 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் அவதாரம்; எஸ்.ஜே.சூர்யாவை வாழ்த்திய சிம்பு!

கோலிவுட்டில் தனது கரியரில் மட்டுமல்லாது அஜித், விஜய் ஆகியோரின் கரியரிலும் மிக முக்கியான திரைப்படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து `நியூ’, `அன்பே ஆருயிரே’ ஆகிய படங்களைத் தானே இயக்கி நடித்த எஸ்.ஜே.சூர்யா கடைசியாக 2015-ல் தானே நடித்து இசையமைத்த `இசை’ படத்தை இயக்கியிருந்தார். குஷி படத்தில் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா அதன்பிறகு, 2016-ல் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தில் நடிகராக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற எஸ்.ஜே.சூர்யா, அடுத்தடுத்து ஸ்பைடர், மெர்சல், மாநாடு, வதந்தி (வெப் சீரிஸ்), … Read more

70000 கன அடியாக ஓகேனக்கல் காவிரி நீர் வரத்து  அதிகரிப்பு

ஒகேனக்கல் தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 70,000  கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயரத் தொடங்கியது. நேற்று ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 57 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.  இவ்வாறு நீர்வரத்து உயர்ந்ததை … Read more

ஆதார் கார்டில் ஈஸியாக மொபைல் எண் மாற்றுவது எப்படி?

Aadhaar mobile number update : ஆதார் சார்ந்த சேவைகளை ஆன்லைனில் பயன்படுத்த, உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது OTP (ஒரு முறை கடவுச்சொல்) உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கே அனுப்பப்படும். உங்கள் பழைய மொபைல் எண் பயன்பாட்டில் இல்லை என்றால் அல்லது மாற்ற விரும்பினால், ஆதார் என்ரோல்மென்ட் சென்டரில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் மட்டுமே இதை மாற்றலாம். ஆதாரில் மொபைல் எண் மாற்றுவதற்கான வழிமுறைகள்: 1. … Read more

நாடு முழுவதும் 700 வங்கிக்கிளைகளில் 8.5 லட்சம் போலி கணக்குகள் – கண்டுபிடித்த சி.பி.ஐ.

புதுடெல்லி, நாடு முழுவதும் பல்வேறு வங்கிகளின் 700 கிளைகளில், 8.5 லட்சம் போலி வங்கிக்கணக்குகள் தொடங்கி, சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தியதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. அந்த கணக்குகள், முறையான கே.ஒய்.சி. விதிமுறைகளை பின்பற்றாமலும், போலி ஆவணங்களை பயன்படுத்தியும் தொடங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு சில வங்கி அதிகாரிகள், இ-மித்ரா முகவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் அந்த சைபர் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதும் சி.பி.ஐ.க்கு தெரிய வந்தது. இந்த கணக்குகள் பெரும்பாலும் ஒருதடவை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. … Read more