தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி – அதில் பாஜக அங்கம் வகிக்கும்! உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்..

சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி என்றும், அதில் பாஜக அங்கம் வகிக்கும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது அதிமுக பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா  தமிழ் பத்திரிகைக்கு  அளித்துள்ள பிரத்யேக பிரதமர் மோடி அரசின் மிகப்பெரிய சாதனை என்பது, முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்தியது என தெரிவித்துள்ளார். 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, நிர்வாகம் சீரழிந்து கிடந்ததாகவும், உள்நாட்டு … Read more

இடுக்கியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அம்மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கனமழை மேலும் சில நாட்கள் தொடரலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1 More update தினத்தந்தி Related Tags : Rain  Kerala  School  … Read more

ஜெய்ஸ்வால் ஏன் கேட்சுகளை தவறவிட்டார்..? இந்திய முன்னாள் வீரர் விளக்கம்

லீட்ஸ், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. … Read more

ஜப்பானில் சிறுமிகளின் ஆபாச படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்த ஆசிரியர்கள் கைது

டோக்கியோ, ஜப்பானின் அய்ச்சி மாகாணம் நகோயா நகரில் தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அங்குள்ள பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சக ஆசிரியர்களுடனான சமூகவலைதள குழுவில் சிறுமிகளின் ஆபாச படங்களை பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் மற்ற சமூகவலைதளங்களிலும் காட்டுத்தீயாக பரவியது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் நகோயா மற்றும் யோகாகாமா பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் இந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் ஆசிரியர்களை கைது செய்து … Read more

“JEE -ல் 75 -வது ரேங்க்; மும்பை ஐஐடியில் இடம், ஏரோநாட்டிக்கல் கனவு..'' – பட்டாசு தொழிலாளியின் மகள்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், படந்தால் அரசு பள்ளியில் பயின்ற யோகேஸ்வரி. அவரது தாய் பட்டாசு ஆலை தொழிலாளி, தந்தை டீக்கடை தொழிலாளி. அவர்களின் மூன்றாவது பிள்ளையான யோகேஸ்வரி 125 செ.மீ மட்டுமே உயரம் கொண்ட ஒரு மாற்றுத் திறனாளி. அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று வந்த அவர், ஜேஇஇ தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று, மும்பை ஐஐடியில் ஏரோநாட்டிக்கல் பிரிவை தேர்வு செய்துள்ளார். இன்றைய சூழ்நிலையில், ஜேஇஇ தேர்வுக்காக தனியார் பயிற்சி மையங்களில் பலரும் செலவு … Read more

பகுதி நேர வேலை என கூறி இளம் பெண்ணிடம் ரூ.4.62 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை: பகுதி நேர வேலை எனக் கூறி இளம் பெண்ணிடம் ரூ.4.62 லட்சம் மோசடி செய்த பெங்களூரை சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமி (26). மண்ணடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் லட்சுமியின் இன்ஸ்டாகிராம் ஐடி-க்கு பகுதி நேர வேலை சம்பந்தமாக லிங் ஒன்று வந்தது. அதை கிளிக் செய்தவுடன் லட்சுமியை தொடர்பு கொண்ட பெண் ஒருவர், சில வேலைகளை கொடுத்துள்ளார். … Read more

அரசியல் சாசனத்தில் உள்ள ‘மதச்சார்பின்மை’ வார்த்தை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்: ஆர்எஸ்எஸ்

புதுடெல்லி: அம்பேத்கர் வரைந்த இந்திய அரசியல் சாசன முகவுரையில் இல்லாத ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘சோசலிசம்’ ஆகியவை வார்த்தைகள் தொடருவது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது. நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் 50-ம் ஆண்டை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே, “1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவசரநிலைச் சட்டத்தை பிரகடனத்தினார். அவசரநிலையின் போது அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தால் … Read more

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் அதிரடி பிரம்மாண்ட திரைப்படங்கள் வீடியோ வெளியீடு

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், 2025 முதல் 2027 வரை தயாராகி திரையரங்குகலீல் வெளியாகவுள்ள, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும், திரைப்படங்களின் வரிசையை, அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் இன்று பிரம்மாண்டமாக வெளியிட்டது.

ஆனி மாதம் புது வீடு, நிலம் பத்திரப்பதிவு செய்யப்போறீங்களா? தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

Tamil Nadu Government : ஆனி மாதம் புது வீடு, நிலம் பத்திரப்பதிவு செய்பவர்களுக்காக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பறந்து போ: "இந்தப் படத்தை நீதான் எடுத்தியானு ராம்கிட்ட கேட்டேன்; காரணம்…" – நடிகர் சித்தார்த்

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’. இத்திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பறந்து போ அதில் கலந்துகொண்டு பேசிய சித்தார்த், “‘பறந்து போ’ எங்களுடைய படம்தான். ராமினுடைய எல்லா படங்களும் என்னுடைய படம். என்னுடைய எல்லா படங்களும் ராமிடைய படம். ராமினுடைய எல்லா படங்களையும் முதலில் பார்த்த … Read more