ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து மேலும் 173 பேர் நாடு திரும்பினர்

புதுடெல்லி, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் காரணமாக அந்த நாடுகளில் இருந்து இந்தியர்கள் அவசரம் அவசரமாக ஊர் திரும்பினார்கள். அவர்களை அழைத்து வர இந்திய அரசு ‘ஆபரேஷன் சிந்து’ என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு போர் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ஈரானில் இருந்து இந்தியர்களின் வெளியேற்றம் தொடர்ந்தது. நேற்று முன்தினம் மாலை 296 பேரும், நேற்று அதிகாலை 272 பேரும் வந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 10.30 மணிக்கு மேலும் … Read more

'விண்வெளி பயணம் அற்புதமாக உள்ளது; எதிர்பார்ப்புகளை மிஞ்சிவிட்டது' – சுபான்ஷு சுக்லா

வாஷிங்டன், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலம் நேற்று மதியம் 12.01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார். … Read more

Shanghai: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரகடனத்தை நிராகரித்த இந்தியா!? – காரணம் என்ன?

சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று (ஜூன் 25) தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றிருந்தார். 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப் பின்னர் மோடி அரசின் அமைச்சரவையிலிருந்து சீனா சென்றுள்ள முதல் அமைச்சர் ராஜ்நாத் சிங். ஆனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டுப் பிரகடனத்தில் … Read more

தீவிரவாதிகள் தாக்குதலை தடுக்கும் வகையில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்திகை நிறைவு

சென்னை: தீவிரவாதிகள் தாக்குதலைத் தடுக்கும் வகையில் நடைபெற்ற 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை நேற்றுடன் நிறைவடைந்தது. ஒத்திகையின்போது தீவிரவாதிகள் போல் ஊடுருவ முயன்ற 13 வீரர்கள் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து 2 டம்மி வெடிகுண்டு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். இச்சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு … Read more

நாடாளுமன்றத்தை விட அரசியல் சாசனம்தான் உயர்ந்தது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து

புதுடெல்லி: அரசியல் சாசனம்தான் மிக உயர்ந்தது என்றும் ஜனநாயகத்தின் 3 பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவை தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவை கடந்த மாதம் பொறுப்பேற்றார். இந்நிலையில், அவருடைய சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித் துறை ஆகிய ஜனநாயகத்தின் 3 பிரிவுகளில் எது … Read more

கூமாபட்டி : குட் நியூஸ் கொடுத்த தமிழ்நாடு அரசு! கலெக்டர் அறிவிப்பு இதோ

Koomappatti, Tamil Nadu government : இன்ஸ்டாகிராம் வைரல் கிராமமான கூமாபட்டிக்கு தமிழ்நாடு அரசு சூப்பரான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் அங்கு பூங்கா அமையவுள்ளது.

ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா..! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்தபடி,  ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பது தொடர்பாக அரசு டெண்டர் கோரி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ. 34.75 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வரும்போது சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது. தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையை மேம்படுத்தும் வகையிலும், தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் … Read more

அதிமுக துணையுடன் திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்: சங்கரன்கோவில் ‘சம்பவம்’

சங்கரன்கோவிலில் திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே அதிமுக-வுடன் அலையன்ஸ் போட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அறிவாலயத்தை அதிரவைத்திருக்கிறார்கள். 30 வார்​டு​களை கொண்ட சங்​கரன்​கோ​வில் நகராட்​சி​யில் 9 வார்​டு​களில் திமுக வென்​றது. 12 வார்​டு​களை அதி​முக கைப்​பற்​றியது. இருந்தபோதும் கூட்​டணி கட்​சி​களின் தயவில் நகராட்சி தலை​வர் பதவியை அதிர்​ஷ்டக் குலுக்​களில் கைப்​பற்​றியது திமுக. தென்​காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்​பாளர் சரவணனின் மனைவி உமா மகேஸ்வரி சேர்​ம​னா​னார். அதி​முக-வைச் சேர்ந்த … Read more

தலைமறைவான வங்கி மோசடி குற்றவாளி: 40 ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த அசோக் டிரேடிங் நிறுவனத்தில் மேலாளராக இருந்தவர் சதீஷ் குமார் ஆனந்த். இந்நிறுவனத்தின் உரிமையாளர் அசோக் குமார். இவர்கள் இருவரும் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து கடந்த 1977-ம் ஆண்டு பேங்க் ஆப் இந்தியாவில் ரூ.5.69 லட்சத்தை கடனாக பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக 1978-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆனந்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். … Read more