3BHK: "இது என்னோட 40-வது படம்; படம் ஓடுதா இல்லையோ, ஆனால்..!" – நடிகர் சித்தார்த் உருக்கம்

‘எட்டுத் தோட்டாக்கள்’ ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘3BHK’. இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அருண் விஷ்வா இப்படத்தை தயாரித்திருக்கிறார். 3BHK படத்தில்… இதில் இயக்குநர் ராம், மாரிசெல்வராஜ், ரவி மோகன், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அபிஷன் ஜீவிந்த், ‘கொட்டுக்காளி’ வினோத்ராஜ், ‘அயலான்’ ரவிக்குமார், ‘அயலி’ முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் … Read more

Amazon Prime Day 2025: ஜூலை 12 முதல் …ஆயிரக்கணக்கான பிராண்டுகள், அட்டகாசமான தள்ளுபடிகள்

Amazon Prime Day 2025: ஆன்லைன் ஷாப்பிங் உலகில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அமேசான் இந்தியா தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரைம் டே 2025 விற்பனையை அறிவித்துள்ளது. இந்த முறை சிறப்பு என்னவென்றால், இந்தியாவில் முதல் முறையாக இந்த விற்பனை மூன்று நாட்களுக்கு நடைபெறும். ஜூலை 12 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூலை 14 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை, இந்த மெகா நிகழ்வு அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டும் கிடைக்கும். இந்த … Read more

2034ம் ஆண்டு அமல்? ஒரு நாடு, ஒரு தேர்தல்’ குறித்து ஜூலை 11ல் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம்

டெல்லி: ‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’ குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் ஜூலை 11ந்தேதி மீண்டும் கூட உள்ளது. இதைத்தொடர்ந்து 2034ம் ஆண்டு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்த மத்தியஅரசு தயாராகி வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு  எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் இது, அரசியல் சாசனத்தின் … Read more

வெஸ்ட் இண்டீஸ் அபார பந்துவீச்சு.. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 180 ரன்களில் ஆல் அவுட்

பார்படாஸ், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பார்படாசில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணியில் சாம் கான்ஸ்டாஸ் (3 ரன்), கேமரூன் … Read more

சர்வதேச விண்வெளி மையத்தில் கால்வைக்கும்… முதல் இந்தியர் சுபன்ஷு சுக்லா!

Axiom-4 மிஷனில் இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்கள் சென்ற SpaceX Crew டிராகன் விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இணைந்தது.

Amir khan: "60 வயதிலும் ஓர் இணையைக் கண்டடைய உதவியது இதுதான்" – மனம் திறந்த ஆமிர் கான்

கடந்த மார்ச் மாதம் நடந்த பிறந்தநாள் விழாவின்போது, தனது கேர்ள் ஃபிரண்டை உலகுக்கு அறிமுகப்படுத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் ஆமிர் கான். 60 வயதிலும் ஒரு காதலைக் கண்டடைய தனது மனநல சிகிச்சைகள் உதவியதாக வெளிப்படையாகப் பேசியுள்ளார் ஆமிர் கான். தெரபி தன்னை உறுதியாக உணர்ச்சி ரீதியிலான சமநிலையுடன் வைத்திருந்தாலேயே, கௌரி ஸ்ப்ராடுடனான அவரது பிணைப்பு ஆரோக்கியமானதாகவும், அமைதியானதாகவும் வளர்ந்ததாக சமீபத்திய உரையாடலில் கூறியுள்ளார். Amir khan – Gauri Spratt தெரபி ஆமிர் கான் … Read more

தமிழ்நாட்டில் மதத்துக்கு அல்ல, பாஜக கூட்டணிக்கு தான் ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருப்பத்தூர்: “தமிழ்நாட்டில் மதத்துக்கு ஆபத்து என்று அதிமுகவை வைத்துக்கொண்டு, பாஜகவினர் பேசுகிறார்கள். உண்மையில், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு தான் ஆபத்து. மிஸ்டு கால் கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போனவர்கள், தங்களின் அரசியல் லாபத்துக்கு கடவுள் பெயரை ‘மிஸ்-யூஸ்’ செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் போலி பக்தியை அரசியல் நாடகத்தை இங்கு யாரும் ஏற்க மாட்டார்கள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் நடைபெற்ற அரசு … Read more

தெலங்கானாவில் தண்டவாளம் மீது கார் ஓட்டிய இளம்பெண்: ரயில் போக்குவரத்து பாதிப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் தண்டவாளம் மீது இளம்பெண் ஒருவர் காரை ஓட்டிச் சென்றதால் 45 நிமிடம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள நாகுலப்பள்ளி மற்றும் சங்கர்பள்ளி இடையே இளம்பெண் ஒருவர், சுமார் 7 கிலோமீட்டர் தூரம் தண்டவாளத்தில் தனது காரை ஓட்டிச்சென்றதால் ரயில் போக்குவரத்து இரண்டு மணி நேரம் நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது. நாகுலப்பள்ளி அருகே இன்று தண்டவாளத்தில் இளம் பெண் ஒருவர் காரை ஓட்டிச் செல்வதை பார்த்த … Read more

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை! போதை பொருள் பயன்படுத்தினாரா? இல்லையா?

Drug Scandal Case Krishna Investigation : கிருஷ்ணாவிடம் போலீஸார் விடிய விடிய விசாரணை நடத்தியிருக்கின்றனர். இதிலிருந்து பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  

3BHK: "நாங்கள் இருவருமே அப்பள்ளியை விட்டு வெளியே வரவேயில்லை!" – சித்தார்த் குறித்து இயக்குநர் ராம்

‘எட்டுத் தோட்டாக்கள்’ ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘3BHK’. சென்னை போன்றதொரு பெரு நகரில் சொந்த வீடு வாங்கப் போராடும் நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கைக் கதைதான் இந்தத் திரைப்படம். அம்ரித் ராம்நாத் இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. சித்தார்த், ராம், அருண் விஷ்வா, மாரிசெல்வராஜ் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசியிருக்கும் … Read more