‘எமர்ஜென்சி’ காலத்தின் துயர்மிகு அனுபவங்களைப் பகிருங்கள் – பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: அவசரநிலை (எமர்ஜென்சி) காலத்தின் துயர்மிகு அனுபவங்களை சந்தித்தோர் அதனை சமூக ஊடகங்களில் பகிருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் (எமர்ஜென்சி) அமல்படுத்தப்பட்டது. அதன் 50-வது நினைவு நாளான இன்றைய தினத்தை பாஜக ‘அரசியலமைப்பு படுகொலை நாளாக’ ( Samvidhan Hatya Diwas ) அறிவித்துள்ளது. இதனை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். … Read more

200 அடி ஆழம் பூமியை துளைத்த ஜிபியு-57 வெடிகுண்டு: ஈரானின் போர்டோ அணுசக்தி தளம் தகர்ந்தது எப்படி?

டெஹ்ரான்: அமெரிக்கா​வுடன் மோதல் போக்கை கடைப்​பிடிக்​கும் வடகொரி​யா, ஈரான் ஆகிய நாடு​கள் மலைக்கு அடி​யில் அணு சக்தி தளங்​களை அமைத்து உள்​ளன. இந்த அணு சக்தி தளங்​களை அழிக்க பூமியை துளைத்து தாக்​குதல் நடத்​தும் வெடிகுண்​டு​களை தயாரிக்க கடந்த 2002-ம் ஆண்​டில் அமெரிக்கா ஆய்​வினை தொடங்​கியது. புதிய வெடிகுண்டை தயாரிக்​கும் பணி அமெரிக்க நிறு​வனங்​களிடம் வழங்​கப்​பட்​டன. கடந்த 2011-ம் ஆண்​டில் ஜிபியு 57 வெடிகுண்டு அறி​முகம் செய்​யப்​பட்​டது. இது 69 அடி நீளம், 2.6 அடி விட்​டம், … Read more

இனி ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கலாம்: பிஹார் தேர்தலில் புதுமை!

பாட்னா: நாட்டிலேயே முதல் முறையாக மின்னணு முறையில் ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளது பிஹார் மாநில தேர்தல் ஆணையம். இந்த முன்முயற்சி அந்த மாநிலத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அறிமுகமாகிறது. இது தொடர்பாக இந்திய வானொலி செய்தி பிரிவுக்கு பிஹார் மாநில தேர்தல் ஆணையர் தீபக் பிரசாத் விவரித்துள்ளார். அதில் அவர், “மின்னணு முறையில் மொபைல் மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கும் செயல்முறை மொத்தம் இரண்டு ஆண்ட்ராய்டு … Read more

இரவில் போலீஸ் யார் வீட்டுக்கும் போகக்கூடாது – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

Kerala High Court: காவல்துறையை சேர்ந்தவர்கள் இரவு நேரத்தில் யார் வீட்டிற்கும் சென்று கதவை தட்டக்கூடாது என்று கேரளா உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ள Rockstar DSP! அடுத்தடுத்த படங்கள் இதுதான்!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படத்தில் Rockstar DSP பின்னணி இசை பலராலும் ரசிக்கப்பட்டது.

Maargan: "நடிகர்கள் நாடாளக் கூடாது என்பது விதியல்ல" – அரசியலுக்கு வருவது குறித்து விஜய் ஆண்டனி

லியோ ஜான் பால் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, பிரிகிடா, சமுத்திரக் கனி போன்றோர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘மார்கன்’. இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (ஜூன் 24) மதுரையில் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. விஜய் ஆண்டனி அப்போது விஜய் ஆண்டனியிடம், “நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?” எனக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த விஜய் ஆண்டனி , “நான் அரசியலுக்கு … Read more

போதை கும்பலால் பிரச்சினை: பவானி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

சென்னை:   போதை கும்பல் பெண்களிடம் தகாத முறையில் சேட்டை செய்வதாகவும்,   இரவில் அடிதடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டி உள்ள பவானி பகுதி பொதுமக்கள், அந்த போதை கும்பல்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பவானி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பவானி மேற்கு தெரு பகுதியில் இரு டீனேஜ் சிறுவர்களும் ஒரே பெண்ணை காதலிப்பது தொடர்பாக, இடையே ஏற்பட்ட  மோதலில்,  ஒரு சிறுவன் மற்றொரு சிறுவனை தாக்கி உள்ளான். இதையடுத்து பாதிக்கப்பட்ட   சிறுவன் தனது நண்பர்கள் என பலர் … Read more

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பறவைகளை விரட்ட தினமும் ரூ.3.24 லட்சம் செலவு

திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் தரை இறங்கும் விமானங்களுக்கு பறவைகள் பெரும் தொல்லையாக உள்ளன. இந்த நிலையில் விமானங்கள் புறப்படும்போதும் தரை இறங்கும்போதும் பறவைகளை விரட்டுவதற்காக பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இதற்காக 12 இடங்களில் 30 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராக்கெட்டுகள், குண்டுகள் மற்றும் மேலே சென்று மூன்றாக பிரிந்து வெடிக்கும் ஸ்கை ஷாட் உள்ளிட்ட பட்டாசுகள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.3.24 லட்சம் செலவு செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 11 கோடியே 82 லட்சத்து 60 … Read more

அமித் சாத்விக் அதிரடி… கோவைக்கு எதிரான ஆட்டத்தில் திருப்பூர் அணி வெற்றி

நெல்லை, டி.என்.பி.எல். தொடரில் நெல்லையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. திருப்பூர் அணியின் பந்துவீச்சாளரான இசக்கிமுத்து சிறப்பாக பந்துவீசி கோவை அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்தார். அந்த அழுத்தத்திலிருந்து கோவை அணியால் கடைசி வரை நிமிர முடியவில்லை. அந்த … Read more

கம்போடியா எல்லையை மூடிய தாய்லாந்து

பாங்காக், தாய்லாந்து-கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த மாதம் எல்லை பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் வெடித்தது. இதில் ஒரு கம்போடிய வீரர் கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளின் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து தாய்லாந்தில் இருந்து காய்கறி மற்றும் பழங்கள் இறக்குமதி செய்ய கம்போடியா தடை விதித்தது. அதேபோல் தாய்லாந்து திரைப்படங்கள் மற்றும் நாடகங்களை ஒளிபரப்பவும் கம்போடியாவில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக கம்போடியா … Read more