இனி மிஸ் ஆகாது… எல்லாம் ரெடி – விண்வெளிக்கு பாய காத்திருக்கும் சுபன்ஷு சுக்லா!

Shubhanshu Shukhla: இந்தியாவின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா விண்வெளிக்கு இன்று பயணப்பட இருக்கும் நிலையில், அவர் SpaceX டிராகன் விண்கலத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. 

தென்காசி: "என் டிராக்டரை மீட்டுத் தாங்க" – ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த விவசாயி

தென்காசி மாவட்டம் குருவி குளத்தைச் சேர்ந்தவர் சுப்பையா என்பவரது மகன் யேசு ராஜன் (46). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரிடமிருந்து. இவருக்குச் சொந்தமான டிராக்டரைக் கடந்த 2024 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் மாதம் வாடகையாக ரூ.27 ஆயிரம் தருவதாகக் கூறி எடுத்துச் சென்றதாகவும், ஆனால், வாடகையைக் கொடுக்காமல், டிராக்டரை வேறு நபருக்கு விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது. ஜேசு ராஜன் இது குறித்து யேசுராஜன் குருவிகுளம் காவல் நிலையம் … Read more

சென்னை, புறநகரில் இயக்கப்படும் மின் ரயில்களில் பெட்டிகள் அதிகரிப்பு

சென்னை: சென்னை, புறநகரில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் தினமும் 12 லட்சம் பேர் ரயிலில் பயணிக்கின்றனர். இதில் சுமார் 8.6 லட்சம் பயணிகள் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 9 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் … Read more

இந்திய விமானப்படைக்கு அடுத்தாண்டில் 6 தேஜஸ் போர் விமானங்கள் விநியோகம்: எச்ஏஎல் தலைவர் டி.கே.சுனில் உறுதி

பெங்களூரு: ‘‘இந்திய விமானப்படைக்கு அடுத்தாண்டில் 6 தேஜஸ் போர் விமானங்களை விநியோகம் செய்வோம்’’ என எச்ஏஎல் நிறுவன தலைவர் டி.கே.சுனில் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையில் உள்ள மிக்-21 போர் விமானங்களுக்கு மாற்றாக எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 83 தேஜஸ் -1 ஏ போர் விமானங்களை ரூ.48,000 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த 2021-ல் ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்திட்டத்தில் மிகவும் தாமதம் ஏற்படுவதாக இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் சமீபத்தில் அதிருப்தி தெரிவித்தார். இந்நிலையில் … Read more

“எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வாகாது” – போப் லியோ

போர் மூலம் எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்று போப் லியோ கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து போப் லியோ கூறியதாக வாடிகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “மத்திய கிழக்கில் இருந்து, குறிப்பாக ஈரானிலிருந்து தொடர்ந்து கவலையளிக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்று, முன் எப்போதையும் விட, மனிதகுலம் அமைதிக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது பொறுப்புணர்வும் பகுத்தறிவும் தேவைப்படும் ஒரு கூக்குரல். மேலும் இது ஆயுதங்களின் இரைச்சல் அல்லது மோதலைத் தூண்டும் சொற்பொழிவுகளால் மூழ்கடிக்கப்படக் கூடாது. … Read more

இந்திய அணியின் 3 பெரிய தவறுகள்… படுதோல்விக்கு காரணங்கள் என்னென்ன?

India National Cricket Team: 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson – Tendulkar Trophy 2025) தொடரில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் (England vs India) மோதி வருகின்றன. இந்திய அணிக்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கடந்த 20ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் நேற்று (ஜூன் 24) நிறைவடைந்தது. Team England: செய் அல்லது செத்து மடி இந்திய அணி (Team India) இமலாய இலக்காக … Read more

அடிப்படை வசதிகள் இல்லை: தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக விடுதியில் மாணவிகள் 10மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம்!

சென்னை: அடிப்படை வசதிகள் இல்லை என கூறி தரமணி அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக விடுதியில் மாணவிகள் சுமார் 10 மணி நேரம்  உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.  இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் போராட்டத்தை வாபஸ் பெற வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தரமணி பகுதியில் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழக மாணவிகள் விடுதி உள்ளது. இங்கு போதுமான வசதிகள் இல்லை என மாணவிகள் தரப்பில் பல முறை புகார் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தண்ணீர் உள்பட அடிப்படை … Read more

ஆபரேஷன் சிந்து: இதுவரை 2,858 இந்திய நாட்டினர் மீட்பு

புதுடெல்லி, ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. ஈரானில் உள்ள தங்களுடைய நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கேட்டு கொண்டன. அவர்களை மீட்கும் முயற்சிகளையும் மேற்கொண்டன. இதன்படி, … Read more

முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

லீட்ஸ், இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி கே.எல்.ராகுல் (137 ரன்கள்), ரிஷப் பண்ட் (118 ரன்கள்) ஆகியோரின் சதத்தின் உதவியுடன் 96 ஓவர்களில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டாங்கு, பிரைடன் கார்ஸ் தலா … Read more

இங்கிலாந்தில் போலீசாரை கத்தியால் தாக்கிய சகோதரர்களுக்கு 7 ஆண்டு சிறை

லண்டன், இங்கிலாந்தின் வடக்கு பிராந்தியமான லூடன் கிரவுன் நகர சாலை எப்போதும் பரபரப்பாக காணப்டும். கடந்த ஆண்டு அந்த சாலையில் மக்கள் நடந்து சென்றனர். அப்போது அங்கு நடந்து சென்றவர்களிடம் சகோதரர்கள் 2 பேர் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனை போலீசார் தட்டிக் கேட்க முயன்றபோது அந்த நபர்கள் போலீசாரையும் கத்தியால் தாக்கினர். இதில் 2 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வாலிபர்களை மடக்கிப் பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் … Read more