Arun Vijay: "அவரு தெளிவான, பக்குவமான இயக்குநரா இருக்காரு!”- தனுஷ் குறித்து நெகிழும் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய்`ரெட்ட தல’ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘இட்லி கடை’ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்நிலையில் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு அருண் விஜய் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “ `ரெட்ட தல’, ‘இட்லி கடை’ என இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இரண்டு படங்களும் ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது” என்றிருக்கிறார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் அருண் விஜய் தொடர்ந்து தனுஷ் … Read more

ஈரான்-இஸ்ரேல் போர் : போர் நிறுத்தத்தை ‘மீறியது’ ஈரான்… தாக்குதல் நடத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு…

ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் 12 நாட்களாக நீடித்து வரும் நிலையில் கத்தாரில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் நேற்றிரவு தாக்குதல் நடத்தியது. ஈரான் ஏவுகணைகளை ஏவிய சில மணி நேரத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார். மேலும், “போர் நிறுத்தம் அமலில் உள்ளது, தயவுசெய்து அதை மீறாதீர்கள்!” என்று தனது சமூக ஊடகத்திலும் பதிவிட்டிருந்தார். அதேநேரத்தில், தெற்கு இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் மற்றும் … Read more

தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி: தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி

சென்னை, தமிழ்நாடு ஆக்கி சங்கம் சார்பில் முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 8-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. தமிழக அணி தரப்பில் முத்துசெல்வன் 4 கோலும், கேப்டன் ஆடம் சின்கிளைர், சுதர்சன், ரமேஷ், வினோத் குமார் தலா ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு காலிறுதியில் … Read more

Metti Oli: "`இதை ராஜம் பார்த்தாங்கன்னா என்ன சொல்லுவாங்க?'னு கமென்ட் பண்ணுவாங்க" – மெட்டி ஒலி காயத்ரி

சமீபத்தில் நடிகை காயத்ரியையும் அவரது சகோதரர் சஞ்சய் பார்கவையும் பேட்டிக்காக நம் அலுவலகத்தில் சந்தித்தோம். காயத்ரி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `இலக்கியா’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். சஞ்சய் `மனசந்த நூவே ( Manasantha Nuvve) எனும் தெலுங்கு டிவி தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர்களிடம் பேசினோம். சஞ்சய் பார்கவ் – காயத்ரி “இப்ப வரைக்கும் என்ன பண்ணாலும் என்னை `சரோ’வாகத்தான் பார்க்கிறாங்க. படங்களில் எனக்கு கம்ஃபர்டபுளாக இல்ல. நான் நடிச்ச படங்கள் எல்லாமே நல்ல அனுபவங்களைத்தான் கொடுத்திருக்கு. ஆனாலும், எனக்கு … Read more

ஊர்க்காவல் படையினருக்கு பணி நிலைப்பு, ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும்: அன்புமணி

சென்னை: ஊர்க்காவல் படையினருக்கு பணி நிலைப்பு, ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊர்க்காவல் படையினர், தங்களுக்கு பணி நிலைப்பும், ஊதிய உயர்வும் வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் நிலையில், அதை நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வருகிறது. பொருளாதாரப் படிநிலையில் கடைசி இடத்தில் இருக்கும் அவர்களின் … Read more

ஈரான், இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய 457 இந்தியர்கள்

புதுடெல்லி: ஈரானில் இருந்து 292 பேரும், இஸ்ரேலில் இருந்து 165 பேரும் தனித்தனி விமானம் மூலம் இன்று புதுடெல்லி திரும்பினர். அவர்களை அமைச்சர் எல். முருகன், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருவதால், அந்த நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வரும் நோக்கில் ஆபரேஷன் சிந்து எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வரும் பணிகளை … Read more

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 950 பேர் உயிரிழப்பு; 3,450 பேர் காயம்

டெஹ்ரான்: ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 950 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3,450 பேர் காயமடைந்துள்ளதாகவும் இன்று (ஜூன் 23) வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் இரண்டாவது வாரமாக தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் ஏவுகணைகளை வீசி கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியதால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், வாஷிங்டனை தளமாகக் … Read more

தக் லைஃப் தோல்வி.. மன்னிப்பு கேட்ட மணிரத்னம்! என்ன சொல்லியிருக்காரு பாருங்க..

Mani Ratnam Apologizes For Thug Life Failure : கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் வெளியான தக்கலை திரைப்படம் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா? அன்புமணி அட்டாக்!

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி: மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார்? முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா? என அன்புமணி ராமதாஸ் கடுமையாக சாடி உள்ளார். 

Ind vs Eng: மழை பெய்தால் போட்டி என்ன ஆகும்? யாருக்கு வெற்றி வாய்ப்பு?

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்க நாளில் இருந்து வானிலை கணிக்க முடியாததாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் கூட மழை குறிக்கிட்டதால், போட்டி சிறிது நேரம் தடைபட்டு இருந்தது.  போட்டியின் டாஸின் போது பென் ஸ்டோக்ஸ் வானிலை காரணமாக பந்தில் ஸ்விங் இருக்கும் என நினைத்து  பந்து வீச்சை தேர்வு செய்தார். … Read more