“எனது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும்..'' – துணை ஜனாதிபதியை சந்தித்த மீனா

பிரபல நடிகையான மீனா தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் டெல்லிக்கு சென்ற மீனா துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரைச் சந்தித்து பேசியிருக்கிறார். நடிகை மீனா இதுதொடர்பானப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில் உங்களைச் சந்தித்ததைப் பெருமையாக நினைக்கிறன் சார். உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இது எனது எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என்று நம்புகிறேன். … Read more

50 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஷோலே’ திரைப்படத்தின் ‘ஒரிஜினல் கிளைமாக்ஸ்’ உடன் கூடிய ‘அன்-கட் வெர்ஷன்’ முதல்முறையாக திரையிடப்படுகிறது

1975 ஆம் ஆண்டு வெளியான ‘ஷோலே’ திரைப்படத்தின் ‘அன்-கட் வெர்ஷன்’ முதல்முறையாக இத்தாலி திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. ஷோலே படத்தின் வெட்டப்படாத பதிப்பை மீட்டெடுத்திருப்பதுடன் அதன் ‘ஒரிஜினல் கிளைமாக்ஸ்’ மற்றும் சில நீக்கப்பட்ட காட்சிகளையும் இணைத்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக திரையிடப்படுகிறது. இந்திய திரையுலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாக ‘ஷோலே’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் படம் வெளியான போது பாலிவுட்டை தாண்டி இந்திய அளவில் மட்டுமன்றி உலக அரங்கிலும் நல்ல வரவேற்பை … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4¼ கோடி

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 87 ஆயிரத்து 254 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 33 ஆயிரத்து 777 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 28 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் … Read more

கிளப் உலகக் கோப்பை கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

அட்லாண்டா, கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதில் நேற்று முன்தினம் இரவு ‘ஜி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) 6-0 என்ற கோல் கணக்கில் அல் அய்ன் (ஐக்கிய அரபு அமீரகம்) கிளப்பை பந்தாடி 2-வது வெற்றியை பெற்றதுடன் அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது. இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் … Read more

போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை: ஈரான் பரபரப்பு அறிவிப்பு

தெஹ்ரான், ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் அப்போது தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் … Read more

இஸ்ரேல் மீது கடைசி சுற்று ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்திய ஈரான்

Israel Iran War Latest News: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்திருப்பதாகத்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

"அரசியல் இருக்காது என்று நம்பினோம்; ஆனால்…" – முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆர்.பி.உதயகுமார்

முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சித்து வெளியான வீடியோ சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். அறிஞர் அண்ணாவின் மாற்றான் தோட்ட மல்லிகைக்கும் மனமுண்டு எனும் கூற்றின் அடிப்படையிலும், முருக பக்தர்கள் என்ற அடிப்படையில்தான் மாநாட்டில் பங்கேற்றோம். அதில் அரசியல் இருக்காது என்று நம்பினோம். முருக பக்தர்கள் மாநாடு மாநாட்டில் … Read more

அரசு மருத்துவமனைகளை தொடங்கும்போதே போதிய மருத்துவர், செவிலியர்களை நியமிக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை தொடங்கும்போதே போதிய மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அரசு மருத்துவமனைகளுக்கான கட்டிடங்களை கட்டும் திமுக அரசு, அங்கு புதிதாக மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களை நியமிப்பதில்லை. வேலூர் மாநகரில் அமைந்துள்ள பென்லேன்ட் அரசு மருத்துவமனை ரூ.150 கோடியில் பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதை முதல்வர் ஸ்டாலின் நாளை திறக்க உள்ளார். ஆனால், … Read more

ஐரோப்பா, அமெரிக்கா, கனடாவின் சில பகுதிகளுக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம்: ஏர் இந்தியா

புதுடெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் 4 நகரங்கள், கனடாவின் டொராண்டோவுக்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் பதற்றம் 12-வது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் கத்தார் உட்பட சில மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன. எனவே அப்பகுதியில் … Read more

யுஎஸ் ராணுவ தளத்தை குறிவைத்து கத்தார் மீது ஈரான் தாக்குதல்: சவுதி அரேபியா கண்டனம்

அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து கத்தார் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்திய நிலையில், ‘ஈரானின் செயலை எந்தச் சூழலிலும் ஏற்க முடியாது’ என்று சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியா அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சர்வதேச சட்டம் மற்றும் அண்டை நாடுகளின் கொள்கைகளை வெளிப்படையாக மீறும் வகையில், சகோதரத்துவ நாடான கத்தாருக்கு எதிராக ஈரான் தொடுத்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா தனது கடுமையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறது. இது எந்த சூழ்நிலையிலும் … Read more