Iran: அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்; சமாதானத்துக்கு இறங்கி வந்த டிரம்ப்.. ஈரான் பதில் என்ன?

கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல் தற்போது கத்தார் வரை வந்து நிற்கிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்ற குற்றச்சாட்டில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துவந்தது. இஸ்ரேலின் உசுப்பேத்தலால் அமெரிக்காவும் ஈரானின் மூன்று அணு ஆயுதத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்திருந்த ஈரான், சற்றும் சளைக்காமல் இரண்டு நாடுகளுக்கும் பதிலடி கொடுத்துவருகிறது. அதில் ஒரு தாக்குதல்தான் கத்தாரில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளம் … Read more

நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்க கூடாது: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் கூறினார். தமிழக ஆளுநர் மாளிகை சார்பில், மேற்கு வங்க மாநிலம் உருவான தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்தியா பல வேற்றுமைகளை கொண்ட நாடு. இங்கு ஏதாவது நடந்தால் மேற்கு வங்கத்தில் அதன் எதிர்வினை இருக்கும். அதேபோல் மேற்கு வங்கத்தில் ஏதாவது நடந்தால் அதன் எதிர்வினை தமிழகத்தில் … Read more

பஹல்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை 5 நாள் காவலில் எடுத்தது என்ஐஏ

ஜம்மு: பஹல்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 5 நாள் காவலில் எடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக தீவிர விசாரணை நடைபெற்றது. இதில், மிகப்பெரும் திருப்புமுனையாக பஹல்காமின் பட்கோட்டைச் சேர்ந்த பர்வைஸ் … Read more

இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: ட்ரம்ப் கூறுவது என்ன?

வாஷ்ங்டன்: இஸ்ரேல் – ஈரான் இடையிலான 12 நாள் யுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவலில், “அனைவருக்கும் வாழ்த்துகள்! இஸ்ரேல் – ஈரான் இடையே 12 மணி நேரத்தில் (தோராயமாக 6 மணி நேரத்தில் இஸ்ரேல் மற்றும் இரான் தங்களுடைய இறுதி மிஷன்களை நிறைவு செய்த பிறகு) முழுமையான போர் நிறுத்தம் ஏற்படும் என்று … Read more

ஒய் ஜி மகேந்திரன் சாருக்கு தேசிய விருது கிடைக்கும் – சத்யராஜ் புகழாரம்!

சாருகேசி படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் படம் வெளியாக உள்ளது.

Ind vs Eng 1st Test: இன்று கடைசி நாள்.. என்ன நடக்கும்? வெல்லப்போவது யார்?

இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் போட்டியின் கடைசி நாள் இன்று. இங்கிலாந்து அணிக்கு  371 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. நேற்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 21 ரன்களை எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 350 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு தேவையாக உள்ளது. பென் … Read more

ரெட்ஹில்ஸ் பேருந்துநிலையம் மேம்படுத்தும் பணி: பல்வேறு பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றம் – விவரம்…

மாதவரம்: புறநகர் பகுதியான செங்குன்றம் எனப்படும் ரெட்ஹில்ஸ் பேருந்துநிலையம் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால், அங்கு வரும் சில பேருந்துகளின் வழித்தடங்கள் தற்காலைகமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வெளியாகி உள்ளது. செங்குன்றம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால், இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட 36 வழித்தடங்கள், 202 பேருந்துகள் 24.06.2025 அன்று முதல் புழல் ஏரி எதிர்புறம் உள்ள சாமியார் மடம் காலி மைதானத்திலிருந்து இயக்கப்பட உள்ளது என மாநகர் போக்குவரத்துக் … Read more

திருச்சி முகாமில் உள்ள இலங்கை அகதியை நாடு கடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை

புதுடெல்லி, திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள பாஸ்கரன் என்பவரை நாடு கடத்த தமிழ்நாடு அரசு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் விசாவை பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க அனுமதிக்க கோரியும் வக்கீல் ஏ.எஸ்.வைரவன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், என்.கோட்டீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று … Read more

பரபரப்பான சூழலில் இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்

லீட்ஸ், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோரது செஞ்சுரியால் முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 100.4 ஓவர்களில் 465 ரன்கள் எடுத்து … Read more

அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதலுக்கு 'ஆபரேஷன் பஷாரத் அல்-பாத்' என பெயர்

குவைத், ஈரான் அணு ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த 11 நாட்களாக நடந்து வரும் இந்த மோதல்களால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதனையடுத்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், … Read more