புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை

புதுச்சேரி,

புதுச்சேரியை சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) சிறிய வயதில் புற்றுநோய் காரணமாக தனது தாயை இழந்தார். முழுக்க முழுக்க தந்தையின் அரவணைப்பில் அவர் வளர்ந்தார். கருப்பு நிறம் என பலர் அவரை ஒதுக்கிய நிலையில் விடா முயற்சியால் மிஸ் பாண்டிச்சேரி 2020-2021, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019 என பல டைட்டில்களை ஜெயித்தார். பல்வேறு அழகு போட்டியில் பல்வேறு விருதுகளைப் பெற்ற சான் ரேச்சல் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு மாடலிங் பயிற்சி வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.

இந்தநிலையில்,கருப்பழகி பிரிவில் உலகழகி பட்டம் பெற்ற புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல் சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காராமணிகுப்பத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேஷன் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருப்பழகி சான் ரேச்சல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.