கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் 4 கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு நடைபெற்று வருகிறது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரம் அருகே சுரைக்காய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குளத்துள்வாய்பட்டி கிராமத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 45 வீடுகள் அமைந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அதன் பின்னர் குளத்துள்வாய்பட்டி கிராம மக்கள் […]