நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஜிம்பாப்வே 149 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

புலவோயா, ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே, நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 149 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கிரேக் எர்வின் 39 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மேட்ஹென்றி 6 விக்கெட்டும், நாதன் சுமித் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் … Read more

நிலநடுக்கத்திற்கு முன்பே கரை ஒதுங்கிய பெரிய திமிங்கலங்கள்; வீடியோ வைரல்: காரணம் என்ன?

டோக்கியோ, ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து, ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் பதிவாகின. இதனால், பிலிப்பைன்ஸ், பலாவ், மார்ஷல் தீவுகள், சூக், கொஸ்ரே பகுதிகளில் ஒன்று முதல் 3.3 அடி … Read more

Iveco குழுமத்தை ரூ.32,400 கோடியில் வாங்கிய டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்சின் வர்த்தக வாகனங்கள் பிரிவுக்கு மிகப் பெரிய பலமாக இத்தாலின் பிரசத்தி பெற்ற Iveco குழுமத்தின் வரத்தக வாகனங்கள் பிரிவு, பவர்ட்ரெயின் ஆகியவற்றை வாங்கும் நிலையில் இவேகோவின் ராணுவப் பிரிவு பிரிக்கப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய ஆட்டோமொபைல் நிறுவனமான இவெகோ, வர்த்தக வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் உள்ளிட்டவற்றை வடிவமைத்து, தயாரித்து விற்பனை செய்கிறது. லாரிகள், பேருந்துகள், பவர்டிரெய்ன்கள் மற்றும் நிதி சேவைகளை உள்ளடக்கிய பாதுகாப்பு அல்லாத வணிகத்தை கையகப்படுத்துவதை நோக்கமாகக் … Read more

August Month RasiPalan | சூரியன் சாதகம் எந்த ராசிக்கு? | ஆகஸ்ட் மாத ராசிபலன்| Monthly Horoscope

ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் இந்த வீடியோவில் ஆகஸ்ட் மாதம் உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் அமையப்போகின்றன என்பது பற்றி விரிவாக விளக்குகிறார். ஒவ்வொரு ராசிக்கும் எதிர்பார்க்கப்படும் நல்ல மற்றும் சவாலான நிகழ்வுகள், வேலை, தொழில், குடும்பம், ஆரோக்கியம், வருமானம், முதலீடு உள்ளிட்ட அனைத்து பரிமாணங்களையும் இவர் தெளிவாக பகிர்கிறார். ஆகஸ்ட் மாத பலன்கள் தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உகந்த வழிகாட்டுதலையும் பெறுங்கள். Astrologer Bharathi Sridhar explains in detail in this video … Read more

613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்: சேர்க்கை ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

சென்னை: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்​வில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் 613 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்​லூரி​களில் சேரு​வதற்​கான ஆணை​களை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்​கி​னார். தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் அரசு ஒதுக்​கீட்​டுக்கு 6,600 எம்​பிபிஎஸ் இடங்​கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்​ளன. இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் அரசு பள்ளி மாணவர்​களுக்கு 494 எம்​பிபிஎஸ் இடங்​கள், 119 பிடிஎஸ் இடங்​கள் வழங்​கப்படுகின்​றன. இந்​நிலை​யில், சிறப்பு பிரிவு (மாற்​றுத்​திற​னாளி, முன்​னாள் … Read more

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவில்லை: ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் பேசவே இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை யில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நேற்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்கியதும் பல நாடுகளின் பிரதிநிதிகள் எங்களை தொடர்பு​கொண்டு பேசினர். அப்​போது, நிலைமை எவ்​வளவு தீவிர​மானது, சண்டை எவ்​வளவு காலம் … Read more

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னை எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் த்ங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கியுள்ளனர். நாளை முதல் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றும் லாரிகளுக்கு ஒவ்வொரு பிளாண்ட்டுகளிலும் ஒப்பந்தப்படி போதிய லோடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர். இதையொட்டி நெற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் … Read more

கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: நாளை விசாரணை

புதுடெல்லி, தமிழ்நாட்டுக்கு, கடந்த கல்வி ஆண்டுக்கான (2024-25) ‘சமக்ரா சிக்சா’ திட்டத்தின்கீழ் தர வேண்டிய ரூ.2,291 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மும்மொழி சார்ந்த தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தினால்தான் அந்த நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனையடுத்து கல்வி நிதி ரூ.2,291 கோடியை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி. ஆர். கவாய் … Read more

ஐபிஎல்: லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமனம்

லக்னோ, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக கடந்த 4 வருடங்களாக இருந்து வந்த பரத் அருண் அந்த பொறுப்பில் இருந்து விலகி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இணைந்து இருக்கிறார். ‘ஒவ்வொரு மட்டத்திலும் தொழில்முறை, லட்சியம் மற்றும் தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கும் நிர்வாகத்துக்குரிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இணைவதை கவுரவமாக கருதுகிறேன்’ என்று பரத் அருண் தெரிவித்துள்ளார். 62 வயதான அவர் 2014-15, … Read more

இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளை தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஏற்கனவே, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை, வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்த டிரம்ப், ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார். இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் … Read more