காசாவில் போரை முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: ஹமாஸ்

காசா: “காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட தயார். அதேநேரத்தில், போர் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தீவிரவாத குழு, அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலைத் தாக்கி 1,200 பேரைக் கொன்று சுமார் 250 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது. இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியது. 21 மாதங்களாக அங்கு போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போர் காரணமாக காசாவில் 56,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக … Read more

வரதட்சணை கொடுமை..பெண் உயிரிழப்பு! கணவனின் தண்டனையை நிறுத்திய உச்ச நீதிமன்றம்..

Vismaya Dowry Death SC Suspends Jail Sentence : 2021ஆம் ஆண்டு, நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த வரதட்சணை கொடுமை வழக்கு, கேரளாவை சேர்ந்த விஸ்மயாவுடையது. இந்த வழக்கில், அவரது கணவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.   

படத்தை ஹிட் ஆக்க..பழைய முயற்சியை கையில் எடுத்த சிம்பு! என்ன செய்கிறார் தெரியுமா?

Silambarasan To Play Dual Role In STR 49 : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருக்கும் சிம்பு, தற்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.  

அஜித்குமார் மரணம்: "ஐஏஎஸ் அதிகாரியின் அழுத்தம் தான் காரணம்" அதிமுக முன்னாள் அமைச்சர்!

தலைமைச் செயலகத்திலிருந்து ஐஏஎஸ் அதிகாரியின் அழுத்தம் காரணமாக தனிப்படை போலீசார் கொலை செய்துள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். 

சிஎஸ்கேவில் இருந்து ருதுராஜ் நீக்கம்? அப்போ சஞ்சு சாம்சனை வந்தா அவர்தான் கேப்டனா?

சமீபமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை வாங்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதற்கான முயற்சிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது உறுதியாகி உள்ளது. கிரிக்கெட் செய்தி தளத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரி ஒருவர், சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி நிர்வாகம் ஆர்வமாக உள்ளதாக கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் பேசும்பொருளாகி உள்ளது. ஒருபக்கம் ரசிகர்கள் இதனை வரவேற்றாலும், சிலர் தேவையில்லாத செயல் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில் … Read more

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கடன் மோசடியில் ஈடுபட்டதாக எஸ்பிஐ தகவல்… அனில் அம்பானி குறித்து ஆர்.பி.ஐ.யிடம் புகாரளிக்க முடிவு…

இந்தியாவின் மிகப்பெரிய அரசுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் கடன் கணக்கை “மோசடி” என்று வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் அனில் அம்பானி குறித்து வங்கி ஒழுங்குமுறை அமைப்பான இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) புகாரளிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஜூன் 23, 2025 அன்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பகிரப்பட்ட விவரங்களின்படி, கடன் நிதியைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட விலகல் காரணமாக கடன் கணக்கை ‘மோசடி’ … Read more

இந்திய விமானப்படை ஓடுதளத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த தாய், மகன் மீது வழக்கு

பாகிஸ்தானையொட்டி அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகிலுள்ள பட்டுவல்லா கிராமத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமான ஓடுதளம் உள்ளது. 1962, 1965, 1971-ம் ஆண்டுகளில் நடந்த போரின்போது இந்திய விமானப்படை விமானங்களால் பயன்படுத்தப்பட்ட ஓடுதளமாகும். இந்த விமான ஓடுதளம் அமைந்துள்ள இடத்தை பஞ்சாபை சேர்ந்த பெண் உஷான் அன்சால், அவரது மகன் நவீன் சந்த் ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓடுதள … Read more

2வது டெஸ்ட்: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

பர்மிங்காம், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது … Read more

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை தொடங்கிய சுபான்ஷு சுக்லா

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின், ‘டிராகன்’ விண்கலம் வாயிலாக, ‘ஆக்சியம் மிஷன் 4’ திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சமீபத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.அங்கு சென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ளார்.கடந்த 25ஆம் தேதி விண்வெளிக்கு புறப்பட்டு, 26 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த சுபான்சு சுக்லா, கடந்த 6 நாட்களாக விண்வெளியில் பல்வேறு விதமான பணிகளை மேற்கொண்டு … Read more

RBI: இந்திய ரூபாய் நோட்டுகள் எதனால் செய்யப்படுகின்றன தெரியுமா?!

சமீபத்திய ஆண்டுகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் ரூபாய் நோட்டுகளை கையாண்டு தான் வருகிறோம். ரூ10, 100 ரூபாய் 500 ரூபாய் தற்போது நிறுத்தப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வரை நாம் பயன்படுத்தியிருப்போம். இப்படி கைகளிலேயே புழங்கிக் கொண்டிருக்கும் ரூபாய் நோட்டுகளை எதனை கொண்டு தயாரிக்கின்றனர் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? Rupee இது என்ன கேள்வி காகிதம் கொண்டு தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பலரும் நினைப்பீர்கள். ஆனால் அந்த காகிதம் … Read more