போர் நிறுத்தத்திற்கு கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகள் நிபந்தனையின்றி ஒப்புதல்

கோலாலம்பூர், தென்கிழக்கு ஆசிய பகுதியில் அமைந்த தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே நீண்டகால மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், கடந்த மே மாதத்தில் மோதல் போக்கு தீவிரமடைந்தது. இரு நாடுகளின் எல்லையில் தா முயென் தாம் என்ற கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கோருகின்றன. இதுதொடர்பாக கடந்த மே மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதி கொண்டனர். அப்போது, கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். … Read more

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஆக.3-ம் தேதி வரை 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூலை 29) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன என மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயில் கல்வெட்டுகள் முழுமையாகப் படியெடுக்கப்பட்டு தனியே நூலாக வெளியிடப்படுமா? என்பன உள்ளிட்ட கேள்விகளை விசிக எம்.பி. துரை.ரவிக்குமார் மக்களவையில் எழுப்பியிருந்தார். இவற்றுக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்த பதில்கள்: இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கல்வெட்டுப் பிரிவு, சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலிலிருந்து 297 கல்வெட்டுகளைப் பிரதி … Read more

நெய்வேலி TARA POWER PLANT: இளைஞர்களின் வேலையைப் பறிப்பதை ஏற்கமுடியாது – ராமதாஸ் கண்டனம்!

Ramadoss: நெய்வேலி TARA POWER PLANT நிறுவனத்தின் போக்கு முறையற்றது என்றும் உள்ளூர் இளைஞர்களின் வேலையைப் பறிப்பதை ஏற்கமுடியாது என்றும் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஓடும் அரசு பேருந்தின் தானியங்கி கதவு சாலையில் கழன்று விழுந்த கொடுமை – பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் இன்று காலை ஒடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் இருந்து , பேருந்தின் தானியங்கி கதவு சாலையில் கழன்று விழுந்ததால், அந்த பகுதியில் வந்த  வாகன  ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு புதுப்புதுப்பேருந்துகளை வாங்கி இயக்குவதாக கூறி வருகிறது. அவ்ப்போது புதுப்பேருந்துகளையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ஆனால், இதுபோன்ற  புதுப்பேருந்துகள் சென்னை போன்ற முக்கிய பகுதிகளில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக,   இங்குள்ள பழைய … Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டரில் 4 ஆக பதிவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.06 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.46 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.19 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. 1 More update … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 29 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you’re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the … Read more

மோடி நிகழ்வில் திருமாவளவன் பங்கேற்றதில் எந்த திருப்புமுனையும் இல்லை: விசிக

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற கங்கைகொண்ட சோழபுரம் நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டதில் எந்த திருப்புமுனையும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது பிறந்த நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற … Read more

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட சுலேமான் ஷா சுட்டுக்கொலை?

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் ஒருவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்லப்பட்ட சுலேமான் ஷா என்பது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தேடும் பணியை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தினர். இதற்காக ‘ஆபரேஷன் மகாதேவ்’ எனும் ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீநகரில் இருந்து சுமார் 20 கிலோ … Read more

தாம்பரத்தில் போலீசார் அதிரடி சோதனை.. போதைப்பொருள் பறிமுதல், 7 மாணவர்கள் கைது

தொடர் போதை பொருள் கடத்தபவர்களில் 11 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது – தாம்பரம் காவல் ஆணையர் ஐபிஎஸ் அபின் தினேஷ் மோதக் பேட்டி