இந்திய செஸ் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம்.. FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்ற 19 வயது திவ்யா தேஷ்முக்

FIDE World Cup Final: ஜார்ஜியாவின் பதுமி என்ற நகரில் FIDE உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், அனுபவம் வாய்ந்த வீராங்கனை கொனேரு ஹம்பி மற்றும் 19 வயது இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் மோதினர். இருவருமே இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதால், எப்படி ஆனாலும், ஃபீடே மகளிர் உலகக் கோப்பை இந்தியாவுக்கு தான் என்பது முன்பே உறுதி ஆகிவிட்டது. ஆனால், அனுபவம் வாய்ந்த கொனேரு ஹம்பியை வீழ்த்தி இளம் வயதிலேயே ஃபீடே உலகக் கோப்பையை வென்ற … Read more

‘நிபந்தனையற்ற போர் நிறுத்தம்’ : தாய்லாந்து – கம்போடியா ஒப்புக்கொண்டதாக மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் தகவல்

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் சண்டையை நிறுத்த இருநாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் முன்னிலையில் மலேசியாவில் இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு தலைமேயற்ற மலேசிய பிரதமர், பேச்சுவார்த்தையின் முடிவில் இருநாடுகளும் “உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு” ஒப்புக்கொண்டதாக அறிவித்தார். ஜூன் 29 முதல் ஆயுதங்களை கைவிட ஒப்புக்கொண்ட நிலையில், இந்த விவகாரத்தில் நிரந்தர … Read more

Kinetic DX ev vs rivals – கைனடிக் DX எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் யார் ?

மீண்டும் கைனடிக் நிறுவனம் மின்சார பேட்டரி ஸ்கூட்டர் சந்தையில் இந்தியாவின் மிகவும் பழமையான DX பிராண்டினை எலக்ட்ரிக் வெர்ஷனாக மாற்றி ரூ.1.11 முதல் ரூ.1.17 லட்சம் வரையிலான விலையில் வெளியிட்டுள்ளது. ஆனால், போட்டியாளர்களாக உள்ள டிவிஎஸ் ஐக்யூப் 2.2Kwh, சேட்டக் 3001, விடா விஎக்ஸ்2 கோ, மற்றும் ஹோண்டா க்யூசி1 ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்ளுகின்றது என்பதனை ரேஞ்ச் மற்றும் முக்கிய விபரங்களை தொகுத்து அறியலாம் KInetic DX vs Rivals இங்கே வழங்கப்பட்டுள்ள மாடலை தவிர ஓலா … Read more

Bihar SIR: “ஆதாரை குடியுரிமை ஆவணமாக ஏற்றுக்கொள்ளுங்கள்'' – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பீகாரில் ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி’ நடந்தது. அதில் தேர்தல் ஆணையம், 2003-ம் ஆண்டுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள், தங்களது குடியுரிமையை நிரூபிக்க அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்த ஆவணங்களில் ஆதார், ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டையை குடியுரிமை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியது. இந்த உத்தரவின் மூலம், தேர்தல் ஆணையம் வாக்குகளைப் பிரிக்க பார்க்கிறது என ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்தன. வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு … Read more

பாஜக சூழ்ச்சியால் ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசியவர் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி ஐஏஎஸ் அகாடமி தொடங்க இருக்கிறோம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இதில் இலவசமாக படிக்கலாம். இதன் வேந்தராக நாசே ராமசந்திரன் நியமிக்கப் பட்டுள்ளார். செயலாளராக பீட்டர் அல்போன்ஸ், இணை செயலாளர்களாக கே.வி.தங்கபாலு, கே.எஸ்.அழகிரி ஆகியோர் செயல்படுவார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளில் … Read more

“பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக ஏன் நினைக்கிறீர்கள்?” – ப.சிதம்பரம் கேள்வியால் சர்ச்சை

புதுடெல்லி: “பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம்” என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம், ஓர் ஊடகப் பேட்டியில், “பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே? ஏன் நீங்கள்(அரசு) அவர்களைக் கைது செய்யவில்லை? ஏன் நீங்கள் அவர்களை அடையாளம் காணவில்லை? அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 2 அல்லது … Read more

கம்போடியா – தாய்லாந்து இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தை: மலேசியாவில் இன்று நடக்கிறது

கம்போடியா, தாய்லாந்து இடையிலான போர் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இருதரப்பிலும் சமரசத்தை உருவாக்க தாய்லாந்து மற்றும் கம்போடியத் தலைவர்கள் இன்று மலேசியாவில் சந்திக்கின்றனர். கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்து தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயாசாய் ஆகியோர் இன்று (ஜூலை 28) பிற்பகல் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் தலைவராக மலேசிய பிரதமர் இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) … Read more

விபத்தில் இறந்த பெண்..வரதட்சணை திரும்ப கேட்ட உறவினர்கள்! வைரல் செய்தி

Telangana Relatives Seek Dowry Back : பெண் ஒருவர், திருமணமாகி 3 ஆண்டுகள் கழித்து உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் கொடுத்த வரதட்சணையை திரும்ப கேட்டு பாேராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

கர்ணாவின் பணத்தில் கையை வைத்த தீபா! இந்துவுக்கு உருவாக்கும் புதிய சிக்கல் – சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்…

Laptop Surprise Turns Into Trouble: கர்ணாவின் பணம் விஷயத்தில் தீபா எடுத்த முடிவு, இந்துவுக்கு புதிய குழப்பத்தை உருவாக்குகிறது! லேப்டாப் சர்ப்ரைஸ், பவானியின் ஆடிட்டர் என்ட்ரி என சிக்கலுடன் தொடர்ந்து பரபரப்பாகும் “சின்னஞ்சிறு கிளியே”!

தமிழக அரசு வெளியிட்டுள்ள 15 முக்கியமான அதிரடி அறிவிப்புகள்! மிஸ் பண்ணிடாதீங்க!

Tamil Nadu Government Latest News: தமிழக அரசு வெளியிட்ட ‘நிதி, கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம்’ போன்ற துறைகளில் சார்ந்து பொதுவான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன ? அதன் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.