நக்சலைட்களுக்கு ட்ரோன்கள் விற்றவர் கைது

லக்னோ: நக்​சல் ஒழிப்பு நடவடிக்​கை​யில் மத்​திய அரசு கடந்த சில ஆண்​டு​களாக தீவிர​மான நடவடிக்கை எடுத்து வரு​கிறது. இந்​நிலை​யில் நக்​சலைட்​கள் கண்​காணிப்பு பணிக்​காக ட்ரோன்​களை பயன்​படுத்​து​வது கண்​டறியப்​பட்​டது. இது குறித்து தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) தீவிர விசா​ரணை நடத்​தி​ய​தில் உத்தர பிரதேசம் மது​ராவைச் சேர்ந்த விஷால் சிங் என்​பவர் நக்​சலைட்​களுக்கு ட்ரோன்​களை விநி​யோகம் செய்​தது கண்​டறியப்​பட்​டது. அவர் கடந்த மாதம் 29-ம் தேதி டெல்​லி​யில் கைது செய்​யப்பட்டார். அவரிடம் நடத்திய விசா​ரணையில் கடந்த 2019-ம் ஆண்டு … Read more

சாரா அர்ஜுனுக்கு ரன்வீர் சிங் ஜோடி? துரந்தர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் உருவாகி ரன்வீர் சிங் நடிக்கும் ‘துரந்தர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு. இந்த திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது

வரும் 18 ஆம் தேதி முக்கியமான நாள்.. டிஎன்பிஎஸ்சி செயலாளர் முக்கிய அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி செய்திகள்: மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கு வரும் 18 ஆம் தேதி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிப்பு

Killer: "ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன்" – மீண்டும் இணையும் ரஹ்மான் x SJ சூர்யா கூட்டணி

எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் கில்லர் திரைப்படத்தை அவரே இயக்குகிறார். இதில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கில்லர் படத்தின் பூஜை கடந்த ஜூன் 30ம் தேதி நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது வித்தியாசமான கதைக்களங்கள் ரசிகர்களின் விருப்பத்துக்குரியதாக இருந்துவந்துள்ளன. ரஹ்மான் ஆரம்பக்காலத்தில் அஜித், விஜய் போன்ற ஸ்டார்களுக்கு மைல் கல்லாக அமையும் திரைப்படங்களை எஸ்.ஜே.சூர்யா … Read more

நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல, இந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள்! சிவசேனா விளக்கம்…

சென்னை:  சிவசேனா இந்திக்கு எதிரானது அல்ல,  இந்தி  திணிப்புக்கு எதிரானது என  உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா தெளிவுபடுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் நிலைபாட்டுக்கும் எங்களின் நிலைப்பாட்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் கூறியுள்ளது. மகாராஷ்டிராவின் போராட்டம் தொடக்கப் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்படுவதற்கு எதிரானது என்று சிவசேனா (UBT) கூறுகிறது,  இந்தி விஷயத்தில், தங்களுக்கு MK ஸ்டாலினின் பொது ஆதரவு இருந்தபோதிலும் அவரது நிலைப்பாட்டிலிருந்து மாறுபடுவதாக தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. … Read more

“பெரியளவில் மாறாத தங்கம் விலை; உச்சம் தொட்ட வெள்ளி விலை!'' – காரணம் என்ன? | நிபுணர் விளக்கம்

நேற்றை விட, தங்கம் விலை… இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் கூறுவதாவது, “உலக அளவில் பெரிய அளவில் எந்த நிகழ்வும், மாற்றமும் இல்லாததால், தங்கம் விலை அதிகம் ஏறவும், அதிகம் இறங்கவும் இல்லை. ஆனால், வெள்ளி விலை 2012-ம் ஆண்டிற்கு பிறகு, ஒரு அவுன்ஸுக்கு 37 டாலர் என உச்சத்தைத் தொட்டுள்ளது. … Read more

சென்னை – சாலிமர் இடையே சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சென்னை: பயணிகளின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் – மேற்கு வங்க மாநிலம் சாலிமர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் தேவை அடிப்படையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து. இயக்கப்படும் காலம் நீட்டிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – மேற்குவங்க மாநிலம் சாலிமர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் – சாலிமர் இடையே புதன்கிழமைகளில் … Read more

எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர்

லத்தூர்: மகா​ராஷ்டிர மாநிலம் மராத்​வாடா பகுதி லத்​தூர் மாவட்​டத்​தில் உள்ள ஹடோல்டி கிராமத்​தைச் சேர்ந்​தவர் அம்​ப​தாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்​கர் நிலம் உள்​ளது. ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்​வதற்கு தேவை​யான எருதுகள் அல்​லது டிராக்​டரை வாங்க அவருக்கு வசதி இல்​லை. அவற்​றுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வாடகை கேட்​ப​தால், தானே எரு​தாக மாறி அம்​ப​தாஸ் பவாரும் அவரது மனைவி முக்​தா​பா​யும் பல ஆண்​டு​களாக நிலத்தை ஒரு மரக்​கலப்பை மூலம் உழுது விவ​சா​யம் … Read more

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான சிறப்பு ஓய்வூதிய திட்டம் – எப்படி விண்ணப்பிப்பது?

Tamilnadu Government Pension Scheme For Women : தமிழ்நாடு அரசு ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்காக சிறப்பு ஓய்வூதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.  

IND vs ENG: இந்தியா வெற்றி பெற்றாலும் இந்த 3 வீரர்கள் நீக்கப்படுவது உறுதி! கம்பீர அதிரடி!

IND vs ENG: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது நாளில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்டில் பும்பராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தாலும் ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு உதவினர். இரண்டாவது இன்னிங்ஸில் 608 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் … Read more