சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து கூட்டறிக்கை: காரில் பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் ஆலோசனை

தியான்ஜின்: சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. மாநாட்டுக்கு பிறகு, ஒன்றாக புறப்பட்டு சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பிரதமர் மோடியும் காரிலேயே அமர்ந்து ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். முதல் நாள் மாநாட்டின்போது … Read more

இந்த படம் அதிக பேருக்கு பிடிக்காது… Bad Girl படத்திற்கு மிஷ்கின் கொடுத்த 'ரிவ்யூ'

Bad Girl Movie: இந்த திரைப்படம் கண்டிப்பாக 25 சதவீதம் பேருக்கு பிடிக்கும், அவர்கள் வெளியே பிடிக்கும் என சொல்வார்கள் என பேட் கேர்ள் பட விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசி உள்ளார்.

அய்யா வைகுண்டரை முடிவெட்டும் பெருமாள் என்று கூறுவதா? அன்புமணி, அண்ணாமலை ஆவேசம்!

அய்யா வைகுண்டரின் பெயரை, “the god of hair cutting” என்று  மொழிபெயர்த்திருக்கிறார்கள் என அன்புமணி ராமதாஸ் மற்றும் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளனர்.   

லித்தியம் அயர்ண் பாஸ்பேட் (LFP) பேட்டரிகள்: மின்சார ஸ்கூட்டர்களில் அவற்றின் முக்கியத்துவம்

Lithium Iron Phosphate (LFP) Batteries: இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதால், இன்றைய உரையாடல்கள் “இது எவ்வளவு தூரம் செல்லும்?” என்பதற்கு பதிலாக “அது எவ்வளவு காலம் நீடிக்கும்?” என்ற வகையில் மாறியுள்ளன. அந்தக் கேள்வியின் மையத்தில் அனைத்து மின்சார வாகனங்களின் மிக முக்கியமான கூறு உள்ளது – பேட்டரி. Add Zee News as a Preferred Source பரவலாக, இன்று மின்சார இரு சக்கர வாகனங்களில் இரண்டு வகையான … Read more

நீர்வீழ்ச்சியில் குதித்து வாழ்வை முடித்துக்கொள்ள வந்த தொழிலதிபர்… ஆறுதல் கூறி தேற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்த நல்ல உள்ளங்கள்…

நீர்வீழ்ச்சியில் விழுந்து வாழ்வை முடித்துக் கொள்ளும் எண்ணத்துடன் வந்த நபரை ஆறுதல் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகில் உள்ளது ஜோக் பால்ஸ். இந்தியாவின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியான இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். சமீபத்தில் ஜோக் பால்ஸ் வந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஆட்டோவில் ஏறி அந்த பகுதியில் சுற்றியுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுனரிடம் அங்குள்ள அபாயகரமான மற்றும் உயரமான இடங்கள் … Read more

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய வாகனம்: 2 பேர் பலி; 6 பேர் காயம்

டேராடூன், உத்தரகாண்டில் தினமும் மழைப்பொழிவால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்படுகிறது. இதில் சிக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரகாண்டில் கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இதுபற்றி வெளியான தகவலில், சோன்பிரயாக் மற்றும் கவுரிகுண்ட் பகுதிகளுக்கு இடையே முன்கட்டியா மலைப்பகுதியருகே வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, இன்று காலை 7.34 மணியளவில் பெரிய கற்கள் மற்றும் பாறைகள் உருண்டு இந்த வாகனத்தின் மீது விழுந்தன. … Read more

அந்த இந்திய வீரர்தான் நான் எதிர்கொண்ட கடினமான பேட்ஸ்மேன் – ரவி பிஷ்னோய்

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய். ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் கடந்த 2022-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆனார். அந்த வாய்ப்பில் ஒரளவு சிறப்பாக செயல்பட்டுள்ள அவர் அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க போராடி வருகிறார். இருப்பினும் தற்சமயம் இந்திய அணியில் அக்சர் படேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி போன்ற முன்னணி சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் தனது … Read more

பாகிஸ்தான்: ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்து – 5 வீரர்கள் பலி

லாகூர், பாகிஸ்தானின் கில்கித் – பல்திஸ்தான் மாகாணம் டைமர் மாவட்டத்தில் இன்று ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டது. அந்த ஹெகாப்டரில் ராணுவ வீரர்கள் 5 பேர் பயணித்தனர். ஹெலிகாப்டர் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனடியாக ஹெலிகாப்டரை தரையிறக்க விமானி முயற்சித்தார். அப்போது, ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 5 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 1 More update … Read more

பூனைக்காக மினியேச்சர் நகரத்தை கட்டினாரா சீன யூடியூபர்? – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளுக்கு அதன் உரிமையாளர்கள் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கின்றனர். இன்னும் சொல்லபோனால் குழந்தைகளைப் போன்று அதனை பராமரித்து வருகின்றனர். அந்த வகையில் சீன யூடிபர் ஒருவர் பூனைக்கு என்றே ஒரே முழு நகரத்தையும் மினியேச்சர் வடிவில் கட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியமடைந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்த வீடியோவை ஏஐயால் உருவாக்கப்பட்டது என்று கூறி வருகின்றனர். வைரலாகும் வீடியோவின், அந்த நகரத்தில் … Read more

“தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்கச் சொல்லியும் கூட திமுக கேட்கவில்லை!” – மதுரையில் இபிஎஸ் சாடல்

மதுரை: “மக்களைக் காக்கிற காவல் துறையின் டிஜிபி பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு சென்று விட்டது. தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று நாம் சொல்லியும் கூட திமுக அரசு கேட்கவில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தின் நான்காம் கட்டத்தின் முதல் நாளான இன்று திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட 16 கால் மண்டபம் அருகே கூடியிருந்த மக்கள் … Read more