CSK தக்கவைக்க வேண்டிய 4 இளம் இந்திய வீரர்கள்… ரிலீஸ் பண்ணா அவ்ளோ தான்!

IPL 2026 Mini Auction, Chennai Super Kings: ஐபிஎல் 2026 தொடர் மீது தினந்தினம் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. ஐபிஎல் 2026 தொடரை முன்னிட்டு தற்போது டிரேடிங் பேச்சுவார்த்தை உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. சஞ்சு சாம்சன் எந்த அணிக்கு டிரேட் செய்யப்படுவார் என்பதுதான் தற்போது பலரும் கூர்ந்து கவனிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது.

Add Zee News as a Preferred Source

IPL 2026 Mini Auction: உச்சக்கட்டத்தில் டிரேடிங் பேச்சுவார்த்தை 

வரும் டிசம்பர் மாதத்தின் 3வது வாரத்தில் ஐபிஎல் மினி ஏலம் நடைபெற வாய்ப்புள்ளது. மும்பை நகரில் இம்முறை மினி ஏலம் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடும். அதற்கு முன் இந்த டிரேடிங் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் கூறப்படுகிறது.

Chennai Super Kings: சிஎஸ்கேவுக்கு இருக்கும் கட்டாயம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை, குஜராத் அணியுடன் வாஷிங்டன் சுந்தரை All-in Cash மூலம் டிரேட் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதுவரை அது உறுதிசெய்யப்படவில்லை. சிஎஸ்கே அணி கடந்த 2024, 2025 சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை. 2023ஆம் ஆண்டில் சிஎஸ்கே கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், தொடர்ச்சியாக இரண்டு முறை சிஎஸ்கே பிளே ஆப் வராமல் இருந்ததே இல்லை. மேலும், இதற்கு முன் சிஎஸ்கே கடைசி இடத்தில் தொடரை நிறைவு செய்ததும் இல்லை. ஆனால், 2025ஆம் ஆண்டில் இந்த இரண்டுமே நடந்ததால் சிஎஸ்கே இந்த முறை கோப்பையை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

Chennai Super Kings: இந்த 4 இளம் இந்திய வீரர்கள்

அந்த வகையில், சிஎஸ்கே அணி அடுத்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கும், சிறப்பாக விளையாடுவதற்கும் இந்த நான்கு இளம் இந்திய வீரர்களை சிஎஸ்கே கண்டிப்பாக தக்கவைத்தே ஆக வேண்டும். அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.

1. உர்வில் பட்டேல்

27 வயதான உர்வில் பட்டேல் சிஎஸ்கே அணிக்காக கடந்த சீசனில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். வன்ஷ் பேடி காயத்தில் சிக்கியதால் விக்கெட் கீப்பர் பேட்டரான இவரை சிஎஸ்கே மாற்று வீரராக எடுத்தது. இவரின் அதிரடியான ஆட்டம் பலரையும் கவிர்ந்தது. சமீபத்தில் இவர் செய்த ஸ்டம்பிங், தோனியின் புத்திசாலித்தனமான ஸ்டம்பிங் திறனுடன் ஒப்பிடப்பட்டது. அவரும் நான் தோனியிடம் இருந்துதான் இதை படித்தேன் என்றார். மிடில் ஆர்டரில் இவரின் அதிரடியும், விக்கெட் கீப்பிங் திறனும் தோனிக்கு வருங்காலத்தில் மாற்று வீரராக இருப்பார் என கூறப்படுகிறது.

2. அன்ஷுல் கம்போஜ்

25 வயதை நெருங்கி வரும் இவர் சிஎஸ்கேவின் முக்கிய பௌலராக இருப்பார். பவர்பிளேவை பொருத்தவரை இவரின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. டெத் ஓவர்களிலும் சிறப்பாக வீசினால் புவனேஷ்வர் குமார் போல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருப்பார். கடந்த சீசனில் 8 இன்னிங்ஸில் 8 விக்கெட்டை கைப்பற்றியிருக்கிறார். அனுபவம் அதிகரிக்கும்போது இவர் இன்னும் சிறப்பான பங்களிப்பை அளிக்க வாய்ப்புள்ளது. 

3. ஆயுஷ் மாத்ரே

கடந்த சீசனில் ஆயுஷ் மாத்ரே ஓபனிங் வந்த பின்னர்தான் சிஎஸ்கேவின் பெரிய பிரச்னையே தீர்ந்தது. 18 வயதான இவர் கடந்த சீசனில் 8 இன்னிங்ஸில் விளையாடி 240 ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக 94 ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கது. இவரை ஏலத்திற்குவிட்டால் சிஎஸ்கேவால் இவரை இனி எடுக்கவே முடியாது. 

4. ஆன்ட்ரே சித்தார்த்

19 வயதான இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவரை வெறும் ரூ.30 லட்சத்திற்கே சிஎஸ்கே எடுத்தது. உள்நாட்டு தொடர்களில் தற்போது ஓரளவு சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த சீசன் முழுவதும் இவர் விளையாட வைக்கப்படவில்லை என்றாலும் இன்னும் சில காலங்களில் அவர் பார்மிற்கு வரும்போது மிடில் ஆர்டரில் தேவைப்படும் வீரராக இருப்பார். 

மேலும் படிக்க | சிஎஸ்கே டிரேட் பேச்சுவார்த்தை உண்மையா…? வாஷிங்டன் சுந்தரே கொடுத்த விளக்கம்!

மேலும் படிக்க | ஐபிஎல் மினி ஏலம்: இந்த 3 விக்கெட் கீப்பர்களுக்கு கோடிகள் கொட்டும்… உற்றுநோக்கும் CSK

மேலும் படிக்க | CSK-வில் இருந்து சாம் கரன் நீக்கமா? இன்ஸ்டாவில் வந்த மாற்றம் என்ன?

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.