Gautam Gambhir on Rohit Sharma and Virat Kohli: இந்திய கிரிக்கெட் அணி மேற்கொண்ட ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சமீபத்தில் முடிவடைந்தது. சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Add Zee News as a Preferred Source
மூன்றாவது போட்டியில் ரோகித், கோலி அபாரம்
முதல் நடந்த ஒருநாள் தொடரில் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்ற்னர். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் க;லந்து கொண்டனர். இதனால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆனார். மறுப்பக்கம் ரோகித் சர்மா முதல் போட்டியில் 8 ரன்களும், இரண்டாவது போட்டியில் 73 ரன்களையும் குவித்தார். ஆனால் இரண்டு போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்த சூழலில், 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்த நிலையில், இந்திய அணி சிட்னியில் மூன்றாவது போட்டியில் பங்கேற்றது. இப்போட்டியில் இந்திய அணி வென்று ஆறுதல் அடைந்தது. ரோகித் சர்மா 121 ரன்களும் விராட் கோலி 74 ரன்களையும் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். தொடரை இழந்தாலும், ரசிகர்களுக்கு ரோகித், கோலி சிறப்பாக விளையாடியதை கொண்டாடினர். இந்த நிலையில்தான், கெளதம் கம்பீர் பேசி இருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கம்பீர் பேச்சால் சர்ச்சை
பிசிசிஐ வெளியிட்ட ஒரு காணொளியில் கெளதம் கம்பீர் பேசி இருப்பதாவது, தனிப்பட்ட வீரர்களின் செயல்திறனை பார்த்து நான் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் ஒருநாள் தொடரை நாம் இழந்து இருக்கிறோம். ஒரு பயிற்சியாளராக என்னால் ஒருபோது தோல்வியை கொண்டாட முடியாது. ஏனென்றால் நாம் நாட்டுக்காக விளையாடுகிறோம். இவ்வாறு அதில் கூறி இருந்தார். கம்பீரின் இந்த கருத்து ரசிகர்கள் கோலி, ரோகித் ஆட்டத்தை கொண்டாடியதை சாடுவது போல இருப்பதாக கருதப்படுகிறது.
கம்பீரின் இந்த கருத்து தொடர்பாக ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது ஒட்டுமொத்த அணியின் தவறு. சிறப்பாக ஆடிய வீரர்களை பாராட்ட மனம் இல்லாமல் இப்படி மறைமுகமாக தாக்குவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்று சிலர் கருத்து தெரிவித்து வரும் அதே சமயம், சிலர் கம்பீருக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். கம்பீர் கருத்து சரியானதுதான். இந்திய அணியின் வெற்றிதான் முக்கியம். தனிப்பட்ட சாதனைகள் இரண்டாம்பட்சமே என கூறி விவாதம் செய்து வருகின்றனர்.
About the Author
R Balaji