சென்னை: பள்ளி, கல்லூரி ஹாஸ்டல்களுக்கு சென்னை மாநகராட்சி விதித்த வணிக கட்டிட வரியை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அவர்களிடம் குடியிருப்பு சொத்து வரி வசூலிக்க உத்தரவிட்டது. வேலை செய்யும் ஆண்கள்/பெண்கள் விடுதிகள், மாணவ மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிகள் போன்றவை குடியிருப்பு சொத்துக்கள், வணிக விகிதத்தில் வரி விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் கூறி உள்ளது. சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகள், விடுதிகள் வணிகக் கட்டிடங்களுக்கான சொத்து வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தன. […]