‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ – உயர் நீதிமன்றம் வேதனை

மதுரை: திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சர்வ சாதாரணமாகிவிட்டது என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்தவர் தேவா விஜய். இவர் மீது இளம் பெண் ஒருவர் வள்ளியூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். புகாரில் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக கூறி 9 ஆண்டுகளாக பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் இளம் பெண் கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் தேவா விஜய் மீது வள்ளியூர் போலீஸார் … Read more

பிஹார் பேரவையை கலைக்க நிதிஷ் பரிந்துரை 

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களில் வென்று ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது. இந்​நிலை​யில், இப்​போதைய அமைச்​சர​வை​யின் கடைசி கூட்​டம் முதல்​வர் நிதிஷ் குமார் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அமோக வெற்றி பெற்​றதற்​காக நிதிஷ் குமாருக்கு அமைச்​சர்​கள் வாழ்த்து தெரி​வித்​தனர். பின்​னர் இப்​போதைய சட்​டப்​பேர​வையை கலைப்​பது என தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி, முதல்​வர் நிதிஷ் குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை நேற்று சந்​தித்​தார். அப்​போது சட்​டப்​பேர​வையை … Read more

தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பில் இருந்து நடிகை நீது சந்திரா நீக்கம்

பாட்னா, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நடிகை நீது சந்திரா, பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர். மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்த நிலையில், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் கமிஷனின் தூதராக அவர் நியமிக்கப்பட்டு இருந்தார். தேர்தல் கமிஷனின் தூதராக நியமிக்கப்பட்டவர், கட்சி சார்பின்றி விழிப்புணர்வு பணிகளை ஏற்படுத்த வேண்டும். ஆனால் நீது சந்திரா அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து நடிகை நீது சந்திராவை அந்த பொறுப்பில் … Read more

அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு..? இந்திய முன்னாள் வீரர் கேள்வி

சென்னை, கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது. இந்த டெஸ்டில் எந்த அணியும் 200 ரன்களை தாண்டவில்லை. நான்கு இன்னிங்சிலும் பவுமா மட்டுமே அரைசதம் அடித்தார். ஆடுகளத்தில் பவுன்சுடன், பந்து தாறுமாறாக சுழன்று திரும்பியதால் துல்லியமாக கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் தகிடுதத்தம் போட்டனர். இதனால் ஆடுகளம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் இந்திய அணியின் … Read more

வங்கதேசத்தில் அமைதி, ஜனநாயகம் நிலைக்க இந்தியா விரும்புகிறது: வெளியுறவு அமைச்சகம்

புதுடெல்லி, வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 20,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இளைஞர்களின் தொடர் போராட்டங்களால் பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பித்து இந்தியாவில் கடந்த ஓராண்டாக தஞ்சமடைந்துள்ளார். தொடர்ந்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். இதனிடையே வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் … Read more

கடும் பணி நெருக்கடி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று முதல் புறக்கணிப்பு – வருவாய்த் துறை சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உரிய திட்டமிடல், போதிய பயிற்சிகள் இல்லாமல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அளவுக்கு அதிகமான பணி நெருக்கடி காரணமாக இது தொடர்பான அனைத்து பணிகளையும் இன்று முதல் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளது. பணிச்சுமையை கருத்தில் கொண்டு, ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெரா) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: … Read more

மதினா புனித யாத்திரையின்போது டீசல் டேங்கர் மோதி பேருந்து தீக்கிரை: சவுதியில் 45 இந்தியர்கள் உயிரிழப்பு – நடந்தது என்ன?

ஹைதராபாத்: சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய யாத்ரீகர்கள் 45 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். டீசல் டேங்கர் மீது பேருந்து மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மல்லேபல்லி, பஜார் காட், ஆசிஃப் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தார், புனித ஹஜ் யாத்திரை செல்ல தீர்மானித்தனர். அதன்படி 4 சுற்றுலா ஏஜென்சிகள் … Read more

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முக்கிய தீர்ப்பு

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு போரின்போது பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உதயமானது. அப்போது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்த் தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மாணவர்கள் கடந்த 2024 ஜூன், ஜூலையில் பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.போராட்டத்தை அடக்க அப்போதைய பிரதமர் … Read more

பிரதமர் மோடி வருகை எதிரொலி: கோவையில் வரும் 19ந்தேதி 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம்

கோவை: பிரதமர் மோடி கோவை  வருகை எதிரொலியாக  வரும் 19ந்தேதி பகல்  12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.‘ கோவை கொடிசியாவில், விவசாயிகள் சங்கங்களால்   நடத்தப்படும் 25வது தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டில்  கலந்துகொள்ள பிரதமர் மோடி கே 19ந்தேதி கோவை வருகிறார்.  இதையொட்டி,   நாளை மறுநாள் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். … Read more

நாட்டை உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – அரியானாவில் அதிகாரிகள் அதிரடி சோதனை

சண்டிகர், டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதனை விசாரணைக்கு எடுத்தது. விசாரணை மிகத்தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். … Read more