"சுந்தர்.சி விலகியது விபத்தல்ல; ‘அண்ணாமலை’ படத்தின்போதும் இயக்குநர் ஒருவர் விலகினார்" – வைரமுத்து

ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் சுந்தர் சி ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார். கமலும் இதுகுறித்து, “என்னுடைய நட்சத்திரத்திற்குப் பிடித்தக் கதையைத்தான் நான் எடுக்க முடியும், அவருக்குப் (ரஜினி) பிடிக்கும்வரை நாங்க கதையைக் கேட்டுக் கிட்டே இருப்போம். நல்ல கதை கிடைத்தவுடன் நிச்சயம் என்னுடைய தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் வெளியாகும்” … Read more

“நான் பேட்டிங் செய்தாலே அம்மா ஹாப்பி ஆகிடுவாங்க; ஆனால் அப்பா" – மனம் திறக்கும் சூர்யவன்ஷி

இந்திய அணிக்குள் என்னை எப்போது சேர்க்கப்போகிறீர்கள் என்கிற வகையில் நாளுக்கு நாள் தனது அதிரடி ஆட்டத்தை கூட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி. 13 வயதில் 19 வயத்துக்குட்பட்டோர் இளையோர் டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் (58 பந்துகளில்), 14 வயதில் ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக இரண்டாவது சதம் (35 பந்துகளில்) என இளம் வயதிலேயே சாதனைகளைக் குவித்திருக்கிறார். Vaibhav Suryavanshi இப்போது மேலும் ஒரு சாதனையாக, கத்தாரில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ரைசிங் … Read more

எஸ்ஐஆர் திருத்தப் பணிகள்: உஷார்படுத்துகிறார் விஜய்

தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: இந்திய அரசியல் சாசனம் நம் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்குமே கொடுக்கப்பட்ட உரிமையில் மிக முக்கியமானது. வாக்காளர் அடையாள அட்டை, வாக்குரிமை என்பது ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. இதைப் பற்றி நான் முதலில் கேள்விப்பட்ட உடனே, எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் இருக்கும் யாருக்குமே ஓட்டு போடும் உரிமையே இல்லை என்று கூறி … Read more

ராஜேந்திர பாலாஜியை பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரசை கலைத்து விடுங்கள் என்று ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, குறைந்தபட்ச நாகரிகம், அரசியல் நாகரிகம் கூட தெரியாமல், காங்கிரஸ் குறித்தும், ராகுல்காந்தி குறித்தும் பேசி இருக்கிறார். பிஹாரில் காங்கிரஸ் முதன்மைக் … Read more

Varanasi: "மகேஷ் பாபு ராமரின் உருவத்தில் வந்தபோது…" – ராஜமெளலி ஷேரிங்ஸ்

மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கும் படத்திற்கு ‘வாரணாசி’ எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டைட்டில் டீசருக்கே ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட நிகழ்வை நடத்தியிருக்கிறது படக்குழு. Varanasi Movie மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள். படத்தில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் … Read more

வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நம்பிக்கை 

மதுரை: பெண் வழக்​கறிஞர்​கள் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​வ​தால், வருங்​காலத்​தில் பெண் நீதிப​தி​களின் எண்​ணிக்கை அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தாக உச்ச நீதி​மன்ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் தெரி​வித்​தார். உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு வழக்​கறிஞர்​கள் சங்​கம் (எம்​பிஏ) சார்​பில், நீதித்​துறை தேர்​வுக்​குத் தயா​ராகி வரும் இளம் வழக்​கறிஞர்​களுக்​கான வார இறுதி நாள் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. சங்​கத் தலை​வர் எம்​.கே.சுரேஷ் தலைமை வகித்​தார். செயலர் ஆர்​.வெங்​கடேசன் வரவேற்​றார். பயிற்சி வகுப்​பைத் தொடங்​கி​வைத்து உச்ச நீதி​மன்ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் … Read more

காங்கிரஸ், ஆர்ஜேடி தோல்வி: ராகுல் எங்கே என பாஜக கேள்வி

புதுடெல்லி: பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கு தொடக்கத்தில் சில நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி அதன் பிறகு மாயமாகிவிட்டார். தற்போது பிஹார் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளன. இண்டியா கூட்டணியில் இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க ராகுல் காந்தி இந்தியாவில் இல்லாமல் வேறு எங்கு ஓடி ஒளிந்து கொண்டாரா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது ராகுல் காந்தி லண்டனில் இருக்கிறாரா அல்லது மஸ்கட் அல்லது மத்திய கிழக்கில் இருக்கிறாரா என்று … Read more

நீட் விலக்கு மசோதா: ஜனாதிபதியை எதிர்த்து… உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

NEET Exemption Bill: நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதை எதிர்த்து குடியரசுத் தலைவர் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயன்பெறும் வகையிலான இந்த திட்டம் டிசம்பர் 6-ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 3 ஷிப்ட்களில் பணியாற்றும் 31,373 தூய்மைப்பணியாளர்கள் பயன்பெறும் வகையில், முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தூய்மைப் பணியாளர்களுக்கு … Read more

தேஜஸ்வி யாதவ் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்​சி​யின் தலை​வரும், மகாகத்​பந்​தன் கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ் தான் போட்​டி​யிட்ட ரகோபூர் தொகு​தி​யில் 14,532 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றி​பெற்​றார். தேஜஸ்விக்கு மொத்​தம் 1,18,597 வாக்​கு​கள் கிடைத்த நிலை​யில் அவரை எதிர்த்து போட்​டி​யிட்ட பாஜகவைச் சேர்ந்த சதீஷ் குமார் யாதவுக்கு 1,04,065 வாக்​கு​கள் மட்​டுமே கிடைத்​தன. அதே​நேரம் ஜன் சுராஜ் கட்​சி​யின் வேட்​பாளர் சஞ்​சல் குமார் வெறும் 3,086 வாக்​கு​களை மட்​டுமே பெற்​றார். லாலு பிர​சாத் … Read more