50GB இலவச டேட்டா! 365 நாட்கள் ரீசார்ஜ் டென்ஷன் காலி! Prime & Hotstar சலுகை

Vi Recharge Plans: நீங்கள் நாள் முழுவதும் இணையத்தில் உலாவ, வீடியோக்களைப் பார்க்க அல்லது கேம்கள் விளையாட அதிக டேட்டா தேவைப்படும் பயனர் என்றால், சரியான ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். அதிக டேட்டா நன்மைகளையும், நீண்ட கால செல்லுபடியாகும் திட்டங்களையும் தெரிந்துகொள்வது, அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும், உங்கள் இணையம் வேகமாகத் தீர்ந்துவிடாமல் இருக்கவும் உதவும். அதன்படி நீங்கள் 50 ஜிபி கூடுதல் டேட்டாவுடன், நீண்ட காலத்திற்குப் (365 நாட்கள்) செல்லுபடியாகும் ப்ரீபெய்டு திட்டங்களைத் … Read more

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா | Automobile Tamilan

மஹிந்திரா நிறுவனத்தின் BE 6, XEV 9e வெற்றியை தொடர்ந்து INGLO பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய 7 இருக்கை எஸ்யூவி மாடலுக்கு XEV 9S என்ற பெயரை அறிவித்து நவம்பர் 27, 2025ல் அறிமுகம் செய்ய உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. தற்பொழுது வரை பேட்டரி மற்றும் மோட்டார் தொடர்பான விபரங்களுடன் ரேஞ்ச் பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை என்றாலும் அனேகமாக முந்தைய மாடல்களில் 59kwh மற்றும் 79kwh பேட்டரி பேக்குகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. இந்த மாடலின் … Read more

SIR Row : 'கொளத்தூரில்19476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்கள்’ – BJP ஏ.என்.எஸ் பிரசாத் | களம் 03

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்) செய்தி தொடர்பாளர்: தமிழக பாஜககட்டுரையாளர்: ஏ.என்.எஸ் பிரசாத் தவறுக்கு இடமில்லை போலி வாக்காளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக தமிழக அரசு தேர்தல் கமிஷனின் எஸ் ஐ ஆர் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசியல் நோக்கத்துடன் தேர்தல் கமிஷன், பிரதமர் மோடி மீது தொடர்ந்து ஆதாரம் இல்லாத கற்பனை … Read more

“நகராட்சித் துறை முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பதவி விலக வேண்டும்” – கிருஷ்ணசாமி

சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு தொடர்பாக, அத்துறை அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு மதுரையில் அடுத்த ஆண்டு ஜன.7-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து விளக்குவதற்காகவும், கிராம மக்களின் பிரச்சினைகளை தெரிந்துகொள்ளவும் … Read more

‘இந்திக்கு முக்கியத்துவம்; பிற மொழிகள் புறக்கணிக்கப்பு’ – சித்தராமையா ஆதங்கம்

பெங்களூரு: இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை மேம்படுத்த மத்திய அரசு அதிகளவிலான நிதியை வழங்குவதாகவும், மற்ற இந்திய மொழிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் உருவான 70-வது தினத்தை முன்னிட்டு பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சித்தராமையா, “கன்னடத்துக்கு எதிரான அனைவரையும் நாம் எதிர்க்க வேண்டும். கர்நாடக மாநிலம் மத்திய அரசுக்கு ரூ.4.5 லட்சம் கோடி வருவாயை வழங்குகிறது. ஆனால் அதற்குப் பதிலாக ஒரு சிறிய பகுதியை மட்டுமே திரும்பப் பெறுகிறது. கன்னட மொழிக்கு … Read more

அமைச்சராக பொறுப்பேற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன்! யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக இருந்த முகமது அசாருதீன், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகு, அரசியலில் நுழைந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் ‘DC' படத்தின் அறிவிப்பு வெளியானது

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் DC திரைப்படத்தின் Glimpse Video வெளியானது. 

நவம்பரில் வெளுக்குமா கனமழை.. சென்னையில் எப்படி? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

Tamil Nadu Weather Update : தமிழக்ததில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், நவம்பர் மாதத்தில் மழை பொழிவு குறைவாக இருக்கும் என வெதர்மேன் கூறியுள்ளார்.  

Lokesh Kanagaraj: தேவதாஸாக நடிகர் லோகேஷ் கனகராஜ்; ஹீரோயினாக வமிகா கேபி – எப்போது ரிலீஸ்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அவதாரமெடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல்களிலேயே, அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிப்பதாகவும், அதன் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கும் எனவும் அறிவித்திருந்தார். Lokesh Kanagaraj கடந்த சில நாட்களுக்கு முன்பே அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இப்போது அந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜை இயக்கும் இந்தப் … Read more

இழந்த உரிமைகளை மீட்கவும், காக்கவும் கூடிய அரசு அமைக்க உறுதி ஏற்போம்! தமிழ்நாட்டின் பிறந்தநாளையொட்டி அன்புமணி சூளுரை…

சென்னை: நவம்பர் 1ந்தேதி தமிழ்நாடு பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  இழந்த உரிமைகளை மீட்கவும், உரிமைகளை காக்கும் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம் என சூளுரைத்துள்ளார். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மூதறிஞர்  ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றுவதற்காகப் போராடியனார்.   ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதலில் எழுப்பியவர் இவர்தான்.   1956-ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தலைநகராக சென்னை இருக்கவும்,  , திருப்பதியைத் தமிழ்நாட்டோடு … Read more