“நம்பினார் கெடுவதில்லை; எடப்பாடி பழனிசாமியை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை'' – ஆர்.பி. உதயகுமார்

“ஜெயலலிதா இருக்கின்ற வரை அமைச்சராக முடியாமல், அவர் நம்பிக்கையை ஏன் நீங்கள் பெற முடியவில்லைய்? ஜெயலலிதாவிற்கு நீங்கள் செய்த துரோகம் என்ன?” என்று செங்கோட்டையனிடம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். ஓ.பி.எஸ், செங்கோட்டையன், தினகரன் ஆர். பி. உதயகுமார் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “நம்பினவர் கெடுவதில்லை – இது நான்கு மறைத் தீர்ப்பு என்ற இலக்கணத்தின்படி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வாழ்ந்து காட்டி வரலாறு படைத்தார்கள். இந்த இரு பெரும் தலைவர்களின் … Read more

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் புதிய பரிசோதனை வசதி: இதய அடைப்பை 2 நிமிடத்தில் அறியலாம்

சென்னை: சென்னை அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை திட்​டத்​தில், இதய அடைப்பு குறித்து 2 நிமிடத்​தில் தெரிந்து கொள்​ளும் புதிய வசதி செயல்​பாட்​டுக்கு வந்​துள்​ளளது. இது தொடர்​பாக சென்னை அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யின் ஒருங்​கிணைப்பு அதி​காரி ஆனந்த்​கு​மார் கூறிய​தாவது: ஓமந்​தூ​ரார் வளாகத்​தில் உள்ள இந்த பன்​னோக்கு மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை திட்​டம் 4 வித​மான கட்​ட​ணத்​தில் மேற்​கொள்​ளப்​படு​கிறது. இதில், ‘பிளாட்​டினம் பிளஸ்’ திட்​டம் ரூ.4,000 கட்​ட​ணம் கொண்​டது. … Read more

பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: ஜேவிசி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல்

பாட்னா: பிஹார் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்று கருத்​துக் கணிப்​பில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது. பிஹார் தேர்​தல் வரும் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக அடங்​கிய தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. பிஹாரில் … Read more

இந்த நவம்பர் மாதம் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை?

2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மொத்தமாக 20 வேலை நாட்கள் இருக்கும். எந்த எந்த நாட்கள் விடுமுறை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இந்திய அணியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கம்! பிசிசிஐ சொன்ன காரணம் இதான்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், தொடரின் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இதன் பின்னணியில் இந்திய அணியின் ஒரு நீண்ட கால திட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. Add Zee News as a Preferred Source  Update The … Read more

“அதிமுக – தவெக கூட்டணி அமைத்து வென்றால், விஜய்யை காலி செய்து விடுவார் எடப்பாடி'' – டிடிவிதினகரன்

`SIR குறித்து ஏன் பயம்?’ திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “எஸ்.ஐ.ஆர் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை அரசு நடத்தியிருந்தால் கலந்து கொள்வோம். தி.மு.க நடத்தியதால் கலந்து கொள்ளவில்லை. பீகாரில் நடந்த எஸ்.ஐ.ஆர்-ல் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தெரிவித்தனர். பீகாரில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி உள்ளது. அதனால், அங்கு குளறுபடிகள் நடந்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில தி.மு.க ஆட்சி நடந்து வருகிறது. தமிழ்நாட்டு அதிகாரிகள் தான் கணக்கெடுக்க போகிறார்கள். … Read more

தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: வேலுசாமிபுரம் வர்த்தகர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர்: கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்​தது தொடர்​பாக, அப்​பகு​தி​யைச் சேர்ந்த 10-க்​கும் மேற்பட்ட வர்த்​தகர்​களிடம் சிபிஐ அதி​காரி​கள் நேற்று விசா​ரணை மேற்​கொண்​டனர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இந்த வழக்கை சிபிஐ விசா​ரித்து வரு​கிறது. அக். 30-ம் தேதி முதல் நேற்று முன்​தினம் வரை சம்​பவம் நடை​பெற்ற வேலு​சாமிபுரத்​தில் சிபிஐ அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். அப்​போது, 3-டி … Read more

ரூ.650 கோடி திரட்டி கொள்ளை: பிரசாந்த் கிஷோர் மீது புகார்

பாட்னா: பிஹார் சுயேச்சை எம்​.பி. ராஜேஷ் ரஞ்​சன் என்​கிற பப்பு யாதவ், தனி​யார் தொலைக்​காட்​சிக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: தேர்​தல் வியூ​கம் வகுக்க மாநிலத்​துக்கு மாநிலம் ஓடிய​வர் பிர​சாந்த் கிஷோர். அவர் பிஹார் வந்து முதல்​வர் நிதிஷ் குமாரை வளர்ப்​புத் தந்தை என்று அழைத்து இங்​கேயே தங்​கு​வ​தாக கூறி​னார். பிறகு ஜெகன்​மோகன், மம்தாவிடம் ஓடி​னார். கன்​சல்​டன்சி சேவை மூலம் தனக்கு பணம் வரு​வ​தாக பிர​சாந்த் கிஷோர் கூறுகிறார். ஆனால் அவர் கூறும் நிறு​வனத்​தின் நிதி அறிக்​கை​யில் இவருக்கு … Read more

நகை கடன் தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு! தாமதித்தால் ரூ.5000 அபராதம்!

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய நகை கடன் தொடர்பான கட்டமைப்பில், வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மகளிர் உலக கோப்பை வெற்றி! ஒவ்வொரு வீரருக்கு கிடைக்கும் பரிசு தொகை எவ்வளவு?

நேற்று இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக மாறியுள்ளது. நவிமும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியில், தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு பிறகு, இந்திய அணி மீது பண மழை பொழிந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் … Read more