கிணற்றுக்குள் விழுந்த புலி: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

திருவனந்தபுரம், கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் வில்லோனிபரா கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கிணறு உள்ளது. இந்த கிணற்றுக்குள் இன்று புலி விழுந்துள்ளது. கிணற்றுக்குள் தண்ணீர் இருந்த நிலையில் அந்த தண்ணீரில் புலி தத்தளித்துள்ளது. கிணற்றுக்குள் விழுந்த புலி உறுமியுள்ளது. புலியின் உறுமல் சத்தம் கேட்டு அந்த கிராமத்தினர் சிலர் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது , புலி கிணற்றில் உள்ள தண்ணீர் தத்தளித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற … Read more

5வது டி20 போட்டி: 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி 12 ஓவரில் 5 … Read more

நான் கடும் கோபத்தில் இருக்கிறேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், ரஷிய அதிபர் புதின் வீடு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷியா முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உக்ரைன் மீது டிரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “ரஷிய அதிபர் புதின் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது அவரது வீடு மீது தாக்குதல் நடந்ததாக கூறினார். இதனால் நான் மிகவும் கோபம் அடைந்தேன். ஒரு நாட்டின் தலைவரின் வசிப்பிடத்தைத் தாக்குவது தவறு. இதுபோன்ற செயல்களுக்கு இது சரியான நேரம் அல்ல. எனினும், … Read more

சூடுபிடிக்கும் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை.. முக்கிய தலைக்கு போன் போட்ட விஜய்!

TVK Vijay Latest News: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முக்கிய நபருக்கு போன் செய்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.    

குறைவான மைலேஜ் கொடுத்ததால் விரக்தி: ஷோரூம் வாசலில் மின்சார ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய நபர்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் சோலங்கி. இவர் கடந்த ஆண்டு ரூ. 5 லட்சத்திற்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவை (இ-ஆட்டோ) வாங்கியுள்ளார். இதற்கான முன்பணமாக ரூ. 70 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும், மாத இ.எம்.ஐ. தொகையாக ரூ. 10,655 செலுத்தி வந்தார். மின்சார ஆட்டோவை ஒருமுறை ஜார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும் என்று ஷோரூம் ஊழியர்கள் கூறியுள்ளனர். இதை நம்பி மோகன் ஆட்டோவை வாங்கியுள்ளார். தொடக்கத்தில் ஆட்டோ ஒருமுறை … Read more

தேசிய அளவிலான ஆக்கி போட்டிகள் இனி கோவையிலும் நடைபெறும்: உதயநிதி ஸ்டாலின்

சென்னை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டை விளையாட்டுத் துறையின் தலைநகராக மாற்றியிருக்கும் திராவிட_மாடல் அரசு சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கோவை ஆர்.எஸ்.புரத்தில் சுமார் ரூ.10 கோடியில் Astro Turf வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தை இன்று திறந்து வைத்தோம். இரவிலும் போட்டிகளை நடத்தும் வகையில் மின்கோபுர விளக்குகளுடனும், அனைத்து நவீன வசதிகளுடனும் 7 ஏக்கரில் சர்வதேச தரத்தில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மற்றும் … Read more

இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஷிய அதிபர் புதின்

மாஸ்கோ, உலகம் முழுவதும் நாளை மறுதினம் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. 2026ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி, இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, சீனா, உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஷியாவில் புத்தாண்டுடன் ஜனவரி 7ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை … Read more

தனியார் கல்லூரியில் படித்தாலும்.. தமிழக அரசின் இலவச லேப்டாப் கிடைக்குமா?

ஜனவரி 5ல் இலவச லேப்டாப் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ள நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அரசாணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மீண்டும் போராட்டத்தை தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் – ரிப்பன் மாளிகை அருகே பரபரப்பு!

தனியார்மயமக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர். இன்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி நினைவிடத்தை முற்றுகையிட்டு கைதாகினர். பின்னர் அண்ணா சாலையில் அமர்ந்து போராடி கைதாகினர். கைது செய்தவர்களை மாலைக்கு மேல் காவல்துறையினர் விடுவித்தனர். சென்ட்ரல் அருகே கூடிய தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல் வீட்டுக்கு செல்லக்கூடாது என தீர்மானித்து, மீண்டும் ரிப்பன் பில்டிங் முன்பு … Read more