CSK வீரர் அடுத்தடுத்து சதம்.. செம ஃபார்ம்! பிளேயிங் 11ல் இடம் கிடைக்குமா?

Sarfaraz Khan Performance In Ranji Trophy: 2025-26க்கான ரஞ்சு கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது;. இதில் மும்பை அணிக்காக சர்பராஸ் கான் ஆடுகிறார். மும்பை அணி தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இப்போட்டி நேற்று (ஜனவரி 22) தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது. 

Add Zee News as a Preferred Source

இக்கட்டான சூழ்நிலையில் அசத்திய சர்பராஸ் கான்

நேற்றைய நாள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்களை எடுத்தது. டாப் ஆர்டர் பேட்டர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேப்டன் சித்தேஷ் லாட் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இருவரும் சேர்ந்து 249 ரன்கள் குவித்தனர். சித்தேஷ் லாட் 179 பந்துகள் எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 104 ரன்கள் குவித்து வெளியேறினார். 

இரட்டை சதத்தை நோக்கி சர்பராஸ் கான்

மறுபுறம் விளையாடிய சர்பராஸ் கான் 164 பந்துகளில் 11 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் உட்பட 142 ரன்கள் குவித்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். தொடக்க வீரர்களான் அகில் ஹெர்வாட்கர் 27, ஆகாஷ் ஆனந்த் 35, சர்பராஸ் கான் தம்பி முசிர் கான் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஹைதராபாத் அணி சார்பில் ரோகித் ராயுடு 2 விக்கெட்கள், முகமது சிராஜ்  மற்றும் நிதின் சாய் யாதவ்  தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர். 

ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்த நிலையில், இன்று (ஜனவரி 230 இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்க இருக்கிறது. 142 ரன்கள் இருக்கும் சர்பராஸ் கான் 200 ரன்களை அடிப்பாரா மும்பை அணி எவ்வளவு குவிக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சர்பராஸ் கானின் இந்த ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

CSK Playing 11: சிஎஸ்கே பிளேயிங் 11ல் இடம் கிடைக்குமா? 

டிசம்பர் மாதம் நடந்த மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சர்பராஸ் கானை அடிப்படை விலையான ரூ. 75 லட்சத்திற்கு வாங்கியது. ஆனால் இவருக்கு சிஎஸ்கே பிளேயிங் 11ல் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து அதிரடி காட்டி பல சதங்களை குவித்து தனக்கான இடத்தை பிடிக்க வாய்ப்பு கதவை சர்பராஸ் கான் அடித்து உடைத்து வருகிறார். தற்போது செம ஃபார்மில் இருக்கும் சர்பராஸ் கானை நிச்சயம் சென்னை அணி கண்கானித்து வரும். இன்னும் தொடர்ந்து அவர் தன்னை நிருபிக்கும் நிலையில், சிஎஸ்கே அணி நிச்சயம் அவர்களது பிளேயிங் 11ல் இடம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

CSK Bought At Mini Auction: மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி வாங்கிய வீரர்கள் 

அகேல் ஹொசைன் (ரூ. 2 கோடி), பிரசாந்த் வீர் (ரூ. 14.20 கோடி), கார்த்திக் ஷர்மா (ரூ. 14.20 கோடி), மேத்யூ ஷார்ட் (ரூ. 1.5 கோடி), அமன் கான் (ரூ. 40 லட்சம்), சாக் ஃபௌல்க்ஸ் (ரூ. 75 லட்சம்), சர்ஃபராஸ் கான் (ரூ. 70 கோடி), ராகுல் சாஹர் (ரூ. 5.20 கோடி), மேட் ஹென்றி (ரூ. 2 கோடி). 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.