உள்ளே வரும் ஷ்ரேயாஸ் ஐயர்… முக்கிய வீரருக்கு ஓய்வு – பிளேயிங் லெவன் மாற்றம்!

India vs New Zealand 4th T20I: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 4வது டி20ஐ போட்டி நாளை மறுதினம் (ஜன. 28) விசாகப்பட்டினம் நகரில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுவிட்டது, இருப்பினும் அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்று தொடரை வைட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது.

Add Zee News as a Preferred Source

IND vs NZ 4th T20I: புதிய காம்பினேஷனில் இந்திய அணி

நடப்பு சாம்பியனான இந்திய அணி கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, கடந்த 18 மாதங்களுக்கும் மேல் ஒரு டி20ஐ தொடரை கூட இழக்கவில்லை. தோல்வியே காணாத சாம்பியனாக 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்குள் இந்திய அணி நுழைய இருக்கிறது. எனவே, புதுப்புது காம்பினேஷனை முயற்சித்து பார்த்து, அனைத்து வகையிலும் தயாராக எந்தவித ஓட்டையும் இல்லாத அணியை கட்டமைக்க கேப்டன் சூர்யகுமார் யாதவும், பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் முயற்சித்து வருகின்றனர்.

IND vs NZ 4th T20I: ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் விளையாடவில்லை…

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஸ்குவாடில் திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இந்திய அணி புதிய காம்பினேஷனை கண்டடைந்து விளையாடி வருகிறது. அந்த வகையில், இஷான் கிஷன், ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய் என தற்போதைய ஸ்குவாடில் இருக்கும் அனைவருமே விளையாடிவிட்டனர். ஷ்ரேயாஸ் ஐயர் ஒருவர் மட்டும் இன்னும் பிளேயிங் லெவனில் விளையாடவில்லை.

IND vs NZ 4th T20I: இந்திய அணிக்கு புத்துணர்ச்சி

ஷ்ரேயாஸ் ஐயரும் சரி, ரவி பிஷ்னோயும் சரி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. ரவி பிஷ்னோய் நேற்று 4 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். இது ரவி பிஷ்னோய்க்கு மட்டுமின்றி இந்திய அணிக்குமே புத்துணர்ச்சி அளிக்கும் செய்தியாகும். வாஷிங்டன் சுந்தர் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ள நிலையில், பிஷ்னோய் சிறப்பாக பந்துவீசினால் அவரை ஸ்குவாடில் சேர்க்க அதிக வாய்ப்புள்ளது.

IND vs NZ 4th T20I: யார் யாருக்கு ஓய்வு?

அதேபோல், திலக் வர்மாவுக்கு பதில் தற்போதைய ஸ்குவாடில் இடம்பெற்றுள்ள ஷ்ரேயாஸ் ஐயருக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் நான்காவது டி20ஐ போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவேளை ஷ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றால் அவருக்கு பதில் யாருக்கு ஓய்வு வழங்கப்படும் என்பதும் ஆர்வத்தை கிளப்பி உள்ளது.

IND vs NZ 4th T20I: நம்பர் 5இல் ஷ்ரேயாஸ் ஐயர்

ஒருவேளை இஷான் கிஷன் சிறப்பான பார்மில் இருப்பதன் காரணமாக அவரை ஓபனிங்கில் மாற்றிவிட்டு, சஞ்சு சாம்சனை நீக்க இந்திய அணி திட்டமிடலாம். எனவே, ஷ்ரேயாஸ் ஐயர் நம்பர் 3 இடத்தில் களமிறங்கலாம். இல்லையெனில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் இருவரும் விளையாடினால் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு வழங்கலாம். அப்படி செய்தால் நம்பர் 5 இடத்தில்தான் ஷ்ரேயாஸ் ஐயரால் விளையாட முடியும்.

IND vs NZ 4th T20I: அர்ஷ்தீப் – பும்ரா 

ஹர்திக் பாண்டியா ஓய்வு பெறும்பட்சத்தில் இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் அணிக்குள் வர வாய்ப்புள்ளது. எனவே, அர்ஷ்தீப் சிங் – ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மீண்டும் இணைந்து விளையாட வாய்ப்புள்ளது. அக்சர் பட்டேலும் காயத்தில் இருந்து மீண்டுவிட்டார் என கூறப்படுகிறது, எனவே அவரும் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. இதனால், ரவி பிஷ்னோய் மற்றும் குல்தீப் யாதவ் இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். 

இந்திய அணியின் பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் தூபே, அக்சர் பட்டேல், ரிங்கு சிங், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

வெளியே அமரும் வீரர்கள்: ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி,  குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா.

மேலும் படிக்க | இந்தியா – நியூசிலாந்து 4வது டி20 எப்போது, எங்கு, நேரலையாக பார்ப்பது எப்படி?

மேலும் படிக்க | திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் நிலைமை என்ன? டி20 உலகக் கோப்பையில் இருப்பார்களா?

மேலும் படிக்க | காலியான சஞ்சு சாம்சன் இடம்! உலக கோப்பைக்கு முன்பே மாற்றப்படுவாரா?

                                                                                                

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.