இந்திய அணி இதில் கவனமாக இருக்க வேண்டும்.. இல்லைனா கோப்பை கிடையாது – முழு விவரம்

2026 டி20 உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 08ஆம் தேதி வரை நடக்கும் இத்தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் கடுமையாக உழைத்து வருகிறது. இந்திய அணியை பொறுத்தவரையில், கடந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற நிலையில், அதனை இம்முறை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

Add Zee News as a Preferred Source

ரவி சாஸ்திரி எச்சரிக்கை 

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியும் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருவதால், மீண்டும் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில், இந்திய அணிக்கு ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளார் முன்னாள் இந்திய வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி. அவர் இந்திய அணி கவனமாக இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார். 

பலருக்கு முதல் உலகக் கோப்பை 

இது தொடர்பாக அவர் பேசுகையில், தற்போது உள்ள இந்திய அணியில் பல வீரர்களுக்கு அவர்கள் மீதான சுமை குறைவாக உள்ளது. சிலர் தங்களது முதல் உலகக் கோப்பையை எதிர்கொள்ள இருக்கின்றனர். கடந்த உலகக் கோப்பையில் விளையாடி அனுபவம் கொண்ட வீரர்களும் உள்ளனர். ஜஸ்பிரீத் பும்ரா இருக்கிறார், ஹர்திக் பாண்டியா இருக்கிறார். அதேசமயம் வீரர்கள் நல்ல ஃபார்மிலும் உள்ளனர். சிவம் துபே சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளார். 

இருப்பினும் உலகக் கோப்பை போன்ற ஐசிசி தொடர் முன்னே இருக்கையில், சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. வாஷிங்டன் சுந்தர் உலகக் கோப்பை தொடரை இழக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. திலக் வர்மா விரைவில் இந்திய அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஃபிட்டாக இருப்பார் என நம்புகிறேன். ஏனெனில் திலக் மிகச்சிறந்த வீரர். அவரால் பேட்டிங்கில் நல்ல மாற்றத்தை கொடுக்க முடியும். 

இந்திய அணி இதில் கவனமாக இருக்க வேண்டும்

அதேபோல் சுழற்பந்து வீச்சில் இந்தியாவிடம் நல்ல ஆயுதங்கள் உள்ளன. வருண், அக்சர், குல்தீப் போன்றோர் உள்ளனர். அதனால் இந்திய அணி உலகக் கோப்பையை தக்கவைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இருப்பினும் இந்திய அணிக்கு ஒரு அழுத்தம் இருக்கும். அது எங்கிருந்தோ வந்துவிடும். டி20 போட்டிகளை பொறுத்தவரையில், போட்டி எப்போது வேண்டுமானாலும் மாறும். அது நீங்கள் ஒரு 10 நிமிடங்கள் மோசமாக விளையாடினால் போதும். அதுவே ஆட்டத்தின் போக்கை மாற்றி உங்கள் வெற்றியை பறிக்கும். எனவே, இந்தியா அந்த அழுத்தத்தை எப்படி கையாள்கிறது என்பதை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

India Squad For 2026 T20 World Cup: 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி 

சூர்யகுமார் யாதவ் (கேட்ச்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங். 

 

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.