அபிஷேக் சர்மா ஆட்டம்: நியூசிலாந்து பயிற்சியாளர் கருத்து

சென்னை, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன் சேர்த்து இந்திய அணிக்கு 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அடுத்து களமிறங்கிய … Read more

மியான்மரில் தொடர்ந்து ஏற்படும் நிலநடுக்கம்; மக்கள் அதிர்ச்சி

நைபிடா, இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 25-ந்தேதி 14 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன்படி, அன்று மாலை 4.13 மணியளவில், ரிக்டரில் 3.6 அளவிலான நிலநடுக்கமும், மாலை 4.27 மணியளவில், ரிக்டரில் 3.5 அளவிலான மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவானது. அன்றிரவு 9.52 மணியளவில், ரிக்டரில் 3.9 அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதேபோன்று, கடந்த 24-ந்தேதி … Read more

`6 முறை துணை முதல்வர்' ; ஆட்சி கவிழலாம், கூட்டணி மாறலாம்! அதிகாரத்தை மட்டும் விடாத அஜித் பவார்!

மகாராஷ்டிரா அரசியலில் அண்ணா(தாதா) என்று அனைவராலும் அழைக்கப்படும் அஜித் பவாரின் அகால மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவரது மரணத்தை கேட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கதறி அழுதனர். அஜித் பவார் சிறிய விமானத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு புறப்பட்டு சென்ற போது இந்த துயரச்சம்பவம் நடந்தது. விமான விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், ”விமானம் பாராமதி அருகில் 8.45 மணிக்கு சென்ற போது விமானத்தில் கடுமையான தொழில் … Read more

யார் இந்த அஜித் பவார்? கூட்டுறவுத் துறை முதல் துணை முதல்வர் வரை! 40 ஆண்டுகால சாதனை பயணம்

Ajit Pawar Politics: மகாராஷ்டிராவின் நீண்டகால துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவாரின் எழுச்சியூட்டும் அரசியல் வரலாறு. கூட்டுறவு வங்கி முதல் மாநிலத்தின் உயரிய பதவிகள் வரை அவர் எட்டிய மைல்கற்கள் குறித்து விரிவாக அறிந்துக்கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் காண்டாமிருகங்கள்? – கோவைக்கு அருகே 3,500 ஆண்டுகள் பழமையான எலும்புகள் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் காண்டாமிருகங்கள் (Rhinoceros) வாழ்ந்ததற்கான முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. கோவைக்கு அருகே உள்ள மொளபாளையம் என்ற நியோலிதிக் (புதிய கற்காலத் தொல்லியல் தளம்) இடத்தில், சுமார் 3,500 ஆண்டுகள் பழமையான இந்திய காண்டாமிருகத்தின் எலும்புத் துண்டுகள் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில், மொத்தம் 28 வகையான விலங்குகளின் எலும்புகள் கிடைத்துள்ளன. அதில், காண்டாமிருகத்தின் கால்பகுதியைச் சேர்ந்த நான்கு எலும்புத் துண்டுகள் (இரண்டு மெட்டாகார்பல், இரண்டு கார்பல் எலும்புகள்) அடையாளம் … Read more

அம்பேத்கர் பெயர் விடுபட்டது தற்செயலானது: மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன் விளக்கம்

மும்பை, மராட்டிய மாநில ஊரக வளர்ச்சி மந்திரியும் பா.ஜ.க. மூத்த தலைவருமான கிரிஷ் மகாஜன், குடியரசு தின உரையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டதால், வனத்துறை பெண் அதிகாரி மாதவி ஜாதவ் நிகழ்விடத்திலேயே குரல் எழுப்பினார். “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாத இந்துத்துத்துவ தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்ட மந்திரி கிரிஷ் மகாஜன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதி அனைவருக்கும் அதிகாரம் அளித்த அம்பேத்கர் பெயரை குறிப்பிடாதது திட்டமிட்ட தவிர்ப்பு. என்னை பணி … Read more

மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணிக்கு எதிராக டெல்லி பந்துவீச்சு தேர்வு

காந்தி நகர், 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் குஜராத் மாநிலம் வதோதரா மைதானத்தில் இன்று நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில் டெல்லி – குஜராத் அணிகள் மோதுகின்றன டெல்லி அணி புள்ளி பட்டியலில் 3வது இடத்திலும், குஜராத் அணி 4வது இடத்திலும் உள்ளன.இரு அணிகளுக்கும் அரையிறுதிக்கு முன்னேற இது முக்கிய போட்டியாகும். இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற … Read more

ஐபோன், மேக் பயனர்கள் குரோமை பயன்படுத்த வேண்டாம் – ஆப்பிள் எச்சரிக்கை

உலக அளவில் செல்போன் , கணினி தயாரிப்பில் முதன்மை வகிக்கும் நிறுவனம் ஆப்பிள். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனம் உலக அளவில் அதிக மதிப்புள்ள நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரை அது தனது வாடிக்கையாளர்களின் தனியுரிமை பாதுகாப்பில் கடுமையான விதிகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய குரோம், குரோம் வெர்ஷன்களால் … Read more

Gold Rate: ரூ.1.22 லட்சத்தைத் தாண்டிய பயணம்; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.370-வும், பவுனுக்கு ரூ.2,960-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.15,330 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,22,640 ஆகும். இது வரலாற்று உச்சம் ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.400-க்கு விற்பனை ஆகி வருகிறது. Gold: “இப்போது தங்க நகை … Read more

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணம்.. விமான விபத்து நடந்தது எப்படி?

Ajit Pawar Died In Plane Crash: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அஜித் பவார் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.