நியூ. தொடரை வென்று இருந்தாலும்.. இந்திய அணியில் உள்ள 3 பெரிய பிரச்சனை!

2026 டி20 உலக கோப்பை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் இந்த தொடரின் மீது எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டி20 உலககோப்பைக்கு முன்பு இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரில் 4 – 0 என்ற கணக்கில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி வென்றிருந்தாலும், இந்திய அணியில் மூன்று முக்கிய பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அவை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். 

Add Zee News as a Preferred Source

தொடக்க ஜோடியில் குழப்பம் 

டி20 உலகக் கோப்பை அணி அறிவிக்கும் வரை சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கி வந்தனர். ஆனால் நியூசிலாந்து தொடரில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஐந்து போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் ரன்கள் அடிக்க தவறினார். அவரது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியிலும் ரன்கள் அடிக்க வில்லை. ஆனால் மறுபுறம் இஷான் கிஷன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் 6 அடித்து வருகிறார். ஐந்தாவது டி20 போட்டியில் சதம் அடித்து டி20 பிளேயிங் லெவனனில் நான் நிச்சயம் இருப்பேன் என்பதை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு, இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. டி20 உலக கோப்பையில் யார் தொடக்க வீரராக களமிறவர்கள் என்ற குழப்பம் தற்போது சஞ்சு சாம்சனின் மோசமான பார்மால் எழுந்துள்ளது. 

திலக் வர்மா காயம் 

இந்திய அணியின் முக்கிய வீரராக இருந்து வருபவர் திலக் வர்மா. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் நியூசிலாந்து தொடரிலிருந்து விலகி உள்ளார். மறுபுறம் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் அடுத்த வாரம் தொடங்கும் டி20 உலக  கோப்பைக்குள் குணம் ஆவார்களா என்பது சந்தேகமே. வரும் பிப்ரவரி 7ம் தேதி இந்திய அணி அமெரிக்காவுக்கு எதிராக தங்களது முதல் போட்டியில் விளையாட உள்ளது. அதற்கு முன்பு இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளனர். அதில் இந்த இருவரும் விளையாடுவார்களா மாட்டார்களா என்பது தெரிந்து விடும். திலக் வர்மா தற்போது பெங்களூரில் பயிற்சி பெற்று வந்தாலும், வாஷிங்டன் சுந்தரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. சுந்தருக்கு பதில் மாற்று வீரர் அணியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. 

பும்ராவின் நிலை 

உலக அளவில் சிறந்த டி20 பவுலராக பும்ரா இருந்து வருகிறார். ஆனால் இந்திய அணி அவரை மிடில் ஓவர்களில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால் புது பந்தில் அவரின் விக்கெட் எடுக்கும் திறன் குறைந்து வருகிறது. அவருக்கு பதிலாக இரண்டாவது மற்றும் நான்காவது வரை ஹர்திக் பாண்டியா வீசுகிறார். பும்ரா ஐந்து அல்லது ஆறாவது ஓவர் தான் பந்து வீச வருகிறார். டி20 உலக கோப்பையிலும் இதே பார்முலாவை தான் இந்தியா பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்திய போட்டிகளில் பும்ராவால் விக்கெட்களை எடுக்க முடியவில்லை. அதே சமயம் ரன்களையும் வாரி வழங்கி வருகிறார். இது இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக மாறுமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.