"அருவருப்பான கருத்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கவில்லை.!" – த்ரிஷாவின் வழக்கறிஞரின் அறிக்கை

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன்பு நடிகை திரிஷா குறித்து பேசியதற்கு அரசியல் வட்டாரத்தினர் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

Trisha
Trisha

திமுக எம்.பி கனிமொழி, ”ஒரு ஆணை விமர்சிப்பதற்கு கூட, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி அநாகரிகமாக பேசுவதே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவின் அருவருக்கத்தக்க அரசியல்.” என கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை த்ரிஷாவின் வழக்கறிஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “அரசியலில் உயர் பதவி வகிக்கும் ஒருவரால் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து வெளியிடப்படும் என எனது கட்சிக்காரர் எதிர்பார்க்கவில்லை.

எனது கட்சிக்காரர் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொண்டவர் அல்ல, அத்தகைய தொடர்பு கொள்ளும் நோக்கமும் இல்லை என்பதை தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறார்.

மேலும், கடந்த காலங்களில் தொடர்ந்து கூறி வந்தது போல, அரசியல் விஷயங்களில் அவர் எப்போதும் நடுநிலை போக்கையே பின்பற்றி வருகிறார்.

Trisha Notice
Trisha Notice

எனது கட்சிக்காரர் தனது கலைத் திறமையால் மட்டுமே அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.

மேலும், மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கை ஒருபோதும் பொது விவாதத்தின் பொருளாக ஆக்கப்படக் கூடாது. உயர் பதவிகளில் உள்ளவர்கள் பொது விவாதத்தில் பொறுப்புணர்வு மற்றும் சமநிலையைப் பேண வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனது கட்சிக்காரரின் பெயரை அவருக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் இழுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.