இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் 2026: ட்ரம்ப்-மோடி பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்

India-US Trade Deal 2026: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியப் பொருட்கள் மீதான வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

“இந்திய பிரதமரை அடிபணிய வைக்க ட்ரம்ப் என்ன செய்தார்?" – விசிக தலைவர் திருமாவளவன்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது. மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான … Read more

மோமோஸிற்கு ஆசைப்பட்டு மோசம் பாேன சிறுவன்! ரூ.85 லட்சம் அபேஸ்..நடந்தது என்ன?

Boy Gave 85 Lakh For Free Momos : பிரபலமான பலகாரமாக விளங்கும் மோமோஸிற்கு ஆசைப்பட்டு ஒரு சிறுவன் பல லட்சத்தை கொடுத்திருக்கிறான். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

வித்தியாசமான கதைக்களத்தில் He is pregnant வெப் தொடர்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் டிவி புகழ் நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடித்துள்ள வெப் தொடர் ஹி இஸ் பிரெக்னன்ட். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.  

தேர்தல் பொறுப்பு வேணாம்.. தூக்கி எறிந்த அண்ணாமலை.. பாஜகவில் பரபரப்பு

Annamalai Latest News: பாஜகவில் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். தந்தையின் உடல்நிலை சரியில்லாததால், இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Rajini: தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மை; நேரில் அழைத்து தங்கச் சங்கிலி வழங்கி பாராட்டிய ரஜினி!

ரஜினி சமீபத்தில் மதுரையில் 5 ரூபாய்க்கு பரோட்டா கடை நடத்தி வரும் தனது ரசிகரை நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தார். பாராட்டியதோடு ஒரு தங்கச் சங்கிலியையும் அவருக்கு பரிசாக வழங்கியிருந்தார் ரஜினி. அதைத் தொடர்ந்து, இன்று தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்துப் பாராட்டியிருக்கிறார். பத்மாவின் குடும்பத்தினருடன் ரஜினி அத்துடன் ஒரு தங்கச் சங்கிலியையும் பரிசாகக் கொடுத்திருக்கிறார் ரஜினி. அதைத் தொடர்ந்து, ரஜினி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன. “அடுத்தவங்க சம்பாத்தியத்த வெச்சு … Read more

தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவிப்பு! பாஜகவினர் அதிர்ச்சி…

சென்னை: பாஜக தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். இது பாஜகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  தமிழ்நாட்டில்  இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளது. மேலும் தேமுதிகவை இழுக்க பேச்சுவார்ததை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி,  சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க.வில் தேர்தல் … Read more

`தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்' – போட்டியிடுவதும் சந்தேகம் என அண்ணாமலை அறிவிப்பு

கோவை தனியார் ஹோட்டலில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணாவின் ஆட்சிக்கும், தற்போதைய திமுகவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா.அண்ணாவின் குடும்பத்தினர் இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள் என்று யாருக்காவது தெரியுமா? அண்ணாமலை அண்ணாவுடையே குடும்பத்தினர் யாரும் அரசியல் பக்கமே வருவதில்லை. கருணாநிதியின் மகன், பேரன், கொள்ளு பேரன் வரை அரசியலுக்கு வந்துவிட்டார்கள்.  திமுக அமைச்சர்களுக்கு அண்ணாவை பற்றி 10 வரிகள் கூட எழுதத்தெரியாது. என் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக … Read more

"வெற்றியாளர்களை விட பங்கேற்பாளர்கள் தான் முக்கியம்; நரேஷ் ஐயர் கூட.!"- ஏ.ஆர் ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி சென்னையில் வரும் 14ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த இசைக்கச்சேரியை முன்னிட்டு ஏ.ஆர் ரஹ்மான் சில பேட்டிகளை அளித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தோற்பவர்களுக்கும் வாய்பளிப்பது குறித்து பேசியிருக்கிறார். “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. பாடல் போட்டிகளில் யார் எல்லாம் தோற்று போகிறார்கள் என கவனிப்பேன். நரேஷ் ஐயர் சில சமயம் நன்றாக பாடும் நபர்களை கூட வெளியேற்றுவார்கள். எனக்கு வெற்றியாளர்களைவிட, பங்கேற்பாளர்கள் அனைவரையும் பிடிக்கும். நரேஷ் ஐயர் … Read more

இன்று தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் போராட்டம்!

சென்னை: ​ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள்  மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டாஸ்மாக் பணி​யாளர்​கள் இன்று குடும்​பத்​துடன் தலைமைச் செயல​கத்தை முற்​றுகை​யிட்டு போராட்டம் நடத்​தவுள்​ள​தாக, தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சங்​கம் (ஏஐடி​யுசி) தெரி​வித்​துள்​ளது. தமிழகத்​தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வரு​கின்​றன, இந்த கடைகளில் 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொகுப்​பூ​திய, ஒப்​பந்​தப் பணி​யாளர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். … Read more