Kaattaan: “எனக்கும் பாருவுக்கும் ஆகாது; உங்களுக்கும் வருத்தம் இருக்கலாம். ஆனா.!" – விஜய் சேதுபதி

‘காக்கா முட்டை’ மணிகண்டனின் அடுத்த படைப்பான ‘காட்டான்’ வெப் சீரிஸ் நாளை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

‘கடைசி விவசாயி’ படத்தை தொடர்ந்து மணிகண்டன் டைரக்ட் செய்திருக்கும் இதிலும் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. படகுழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள்.

Kaatan Web Series
Kaatan Web Series

விஜய் சேதுபதி பேசுகையில், “இந்த வெப் சீரிஸுக்கு பின்னாடி நடந்த கதைகளை எடுத்தாலே ரெண்டு, மூணு பார்ட் போகும். இங்க வந்ததும்தான் தமிழ்ல பண்ற பெரிய வெப் சீரிஸ் இதுனு எங்களுக்கு தெரிய வந்தது.

பிரதீப் மில்ராய் பேசியே நம்மள மயக்கிடுவாரு. அப்படிதான் அவர் என்கிட்ட வந்து பிக் பாஸ் பண்றதுக்குக் கேட்டாரு. ‘ஒண்ணு கேட்பேன், நோனு சொல்லக் கூடாது’னு சொல்லிதான் என்கிட்ட வந்து பேசினாரு.

அப்போதான் ‘நீங்க பிக் பாஸ் பண்ணுங்க’னு சொன்னாரு. ‘எனக்கு ஒண்ணுமே தெரியாது, சிம்பு சார், சூர்யா சார் வச்சு பண்ணுங்க. சிம்பு சாருக்கு அனுபவம் இருக்கு’னு சொன்னேன்.

பிறகு என்னை பண்ண வச்சாரு. நான் இன்னைக்கு இங்க நிக்கிறதுக்கு பெரிய அறிமுகமில்லாத மனிதர்கள் வச்ச நம்பிக்கைதான் காரணம். எனக்கு என்மேல நம்பிக்கை இருந்தது இல்ல.

ஒரு வேலை செஞ்சு, அது மத்தவங்க பாராட்டினதும்தான் அந்த விஷயம் எனக்கு தெரியும்ங்கிறது எனக்கு தெரியும். நிறைய பேர் என்னை நம்பின பிறகுதான் நான் என்னை நம்ப ஆரம்பிச்சேன். இயக்குநர் மணிகண்டன் எனக்கு ஷார்ட் ஃபிலிம் மூலமாகதான் அறிமுகமானாரு.

அப்போ என்னை நேர்ல வந்து மீட் பண்ண சொன்னாங்க. நான் போட்டோவுலதான் பார்க்கிற மாதிரி இருப்பேன்னு அவங்ககிட்ட சொன்னேன். அன்னைக்கு ஆரம்பிச்ச பயணம் இன்னைக்கும் இங்க வரைக்கும் தொடர்ந்திருக்கு.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

அவர் ஒவ்வொரு விஷயத்தை பார்க்கிற விதமும் வித்தியாசமாக இருக்கும். அவர் எனக்குக் கொடுத்த படத்திற்கும், பாடத்திற்கும் நன்றி. VJ பார்வதி பத்தி பேசுறதுக்கு எதுவும் இல்ல. எனக்கும் பாருவுக்கும் ஆகாது.

அவங்ககிட்ட வார வாரம் பேசி, டயர்ட் ஆகிட்டேன். உங்களுக்கு பார்வதி மேல, வருத்தம் இருக்கலாம். ஆனா, இந்த சீரிஸ் பார்த்ததும் அவரை உங்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சிடும்.

வடிவேல் முருகன் செய்கிற விமர்சனங்கள் எனக்கு பிடிக்கும். நான் நடிச்ச படங்களையே அவர் கலாய்ச்சிருக்காரு. ஆனா, அதை சுவாரஸ்யமாக பண்ணிடுவாப்ல.” எனப் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.