திருமண விழாவில் ஜோடியாக விஜய் – திரிஷா.. விவாகரத்து கோரும் சங்கீதா! அரசியல் வாழ்க்கை பாதிக்குமா?

Vijay – Trisha Latest Viral Photos: தவெக தலைவர் விஜய்யின் மனைவி விவாகரத்தி கேட்டு நீதிமன்றத்தி வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கு விஜய், நடிகை திரிஷாவுடன் பங்கேற்றது சமூக வலைத்தளத்தை ஆகிரமித்துள்ளது.   

கோயில்களுக்கு சொந்தமான நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்! அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. “ஏழை தெய்வங்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்பதாலா ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை? அல்லது ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஓட்டுரிமை இருப்பதால்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்களா?” என கோபமாக கேள்வி  எழுப்பிய நீதிமன்றம்,. தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், சொத்துக்கள் மற்றும் அவற்றின் வாடகை விவரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் அறியும் வகையில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று … Read more

தருமபுரி: பெற்ற குழந்தையை குப்பையில் வீசிய கல்லூரி மாணவி; விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் சிசுவை குப்பையில் வீசிச்சென்ற கல்லூரி மாணவியின் செயல், தருமபுரியில் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த மாணவி மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது. குழந்தை தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாகலஹள்ளியில் நேற்று முன் தினம் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை யாரோ வீசிச்செல்ல இதை அப்பகுதியிலுள்ள மக்கள் பார்த்து சிசுவை மீட்டு பாளையம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் ஒப்படைத்தனர். … Read more

9 மாநில மற்றும் UT கவர்னர்கள் மாற்றம்… தமிழ்நாடு ஆளுநரின் பொறுப்புகளை கேரள ஆளுநர் கூடுதலாக கவனிப்பார்…

டெல்லி, லடாக், தெலுங்கானா, மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்து ஜனாதிபதி மாளிகை வெள்ளிக்கிழமை இரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பல ஆளுநர்கள் மற்றும் லெப்டினன்ட் கவர்னர்கள் மாற்றப்பட்டுள்ளனர் அல்லது மாற்றங்களின் ஒரு பகுதியாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து அவர்களின் ஐந்தாண்டு பதவிக்காலம் நடைமுறைக்கு வரும். முக்கிய … Read more

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

சென்னை: 2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது திராவிட மாடல் ஆட்சியில் 5 ஆண்டுகளில் 30 சிப்காட் தொழில் வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 816 புதிய தொழிற்சாலைகளுக்கு 7,558 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது மாநில திட்டக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்ட மாறிவரும் பொருளாதாரத்திற்கான தொழில்மயமாக்கல் கொள்கை, … Read more

நாளை சனிப் பெயர்ச்சி: திருநள்ளாறு வரும் பக்தர்களுக்கு ஹாலோகிராம் டிக்கெட், தரிசன கட்டணங்கள், பேருந்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்…

சென்னை:  திருநள்ளாறு நாளை சனிப் பெயர்ச்சியைச் யொட்டி விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு  வரும் பக்தர்களுக்கு ஹாலோகிராம் டிக்கெட், தரிசன கட்டணங்கள், பேருந்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் 21/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா நாளை நடைபெற உள்ளது. நாளை (06.03.2026 )  நடைபெறும் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவிற்காக, ரூ.300 முதல் ரூ.1000 வரையிலான தரிசன கட்டணங்கள், கூடுதல் … Read more

Ind v Eng : 'பயந்துட்டியா.. உயிரே போயிடுச்சு!' – வெளுத்துக்கட்டிய பெத்தேல்; போராடி வென்ற இந்தியா!

வான்கடேவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இமாலய டார்கெட்டை நிர்ணயித்திருந்தது. இங்கிலாந்து வீரர் பெத்தேல் தனது அநாயசமான அதிரடியால் பயம் காட்டினாலும், இந்திய அணி போராடி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது Bethell 254 ரன்கள் டார்கெட் என்பது எப்பேர்பட்ட பேட்டிங் பிட்ச்சாக இருந்தாலும் அசாத்தியமான டார்கெட்தான். அந்த டார்கெட்டை நோக்கி இங்கிலாந்து ஆரம்பத்திலிருந்தே புயல் வேகத்தில் புறப்பட்டது. சால்ட், ப்ரூக், பட்லர் என மூன்று முக்கிய பேட்டர்களின் விக்கெட்டை பவர்ப்ளேக்குள்ளாகவே இங்கிலாந்து … Read more

TN Govt Employees News | அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: GPF பணம் எடுக்கும் வரம்பு ₹20 லட்சமாக உயர்வு!

TN Govt Employees News:  தமிழக அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ள புதிய அரசாணை படி, அரசு ஊழியர்கள் தங்கள் ஜி.பி.எஃப் (GPF) கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான வரம்பு அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி ஊழியர்கள் அதிகபட்சமாக ₹20 லட்சம் அல்லது 75 மாத அடிப்படை ஊதியம் பெற்றுக்கொள்ளலாம்.

மாநிலங்களவை தேர்தல்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல்

சென்னை: மாநிலங்களவை தேர்தல்  வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள திமுக மற்றும்  காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்  மனு தாக்கல் செய்தனர். திமுகவை சேர்ந்த திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்  இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து,  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக், முதல்வர் மு.க. ஸ்டாலின்  வேட்புமனு தாக்கல் செய்தனர். மாநிலங்களவைக்கான தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் … Read more

RN Ravi: அதிரடியாக மாற்றப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி! – பின்னணி காரணம் என்ன?

தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டு உள்ளார். தெலங்கானா உள்ளிட்ட மாநில ஆளுநர்களை இரவோடு இரவாக மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2021-ம் ஆண்டு தி.மு.க அரசு பொறுப்பேற்றதும், தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்தது மத்திய அரசு. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர், தமிழக அரசோடு தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். இதனால், பல்வேறு சர்ச்சைகள் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து நீடித்துவந்தது.  … Read more