தருமபுரி: பாலக்கோட்டில் அதிகாலையில் வாக்கிங் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தமிழ்நாட்டில் வருகிற 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாலை தக்காளி மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் […]