சென்னை: தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் பொதுவாக 3 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், இந்த அங்கீகாரக் காலம், விதிமுறைகளைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 5 ஆண்டாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் […]