மதுரை: தமிழகத்தில் இறந்தோர் இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில், மறைந்தோர் இறுதி ஊர்வலங்களின் போது ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக சென்னை போன்ற நகர்ப்புறங்களில் நடைபெறும் இறுதி ஊர்வலங்களின்போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இறுதி ஊர்வலங்களில் கலந்துகொண்டு ஆடும் சிலரின் அலப்பறை மற்றும் இறுதி ஊர்வலத்தில் போது, பிணத்துடன் எடுத்துசசெல்லுப்படும், பூக்களை பொதுமக்கள் மீது வீசி எறிவது […]