டெல்லி: புதுச்சேரி மாநிலத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1-ந்தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 2026 ஏப்ரல் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கும் பணி தொடங்கும் என்றும், 2027ல் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு பணி இரு கட்டங்களாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, முதல் கட்டமாக 2026 ஏப்ரல் முதல் […]