திருபுவனம்: கீழடி 11ம் கட்ட அகழாய்வில் வெளிப்பட்ட செங்கல் கட்டுமானம் மற்றும் தொடர்ச்சியாக சாய கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாய்வில், சுமார் பத்தாண்டு கால காத்திருப்பிற்கு பின் செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சி இரண்டரை மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, சாயக்கிண்ணங்களும் கிடைத்துள்ளது தொல்லியல் ஆய்வாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுததி உள்ளது. கடந்த 2014 — 15ம் ஆண்டுகளில், கீழடி […]