Rain Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரக் காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் கீழ்திசைக் காற்றுகளின் (Easterlies) வரவு காரணமாக, அடுத்த ஒரு வார காலத்திற்கு மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, இதமான வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Rain Alert - மழை
Rain Alert – மழை

தவிர இன்று (மே.9) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்” என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.