மூத்த குடிமக்களுக்கு பல் மருத்துவ முகாம்| Dinamalar

புதுச்சேரி :புதுச்சேரி மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்கம் சார்பில், இலவச பல் மருத்துவ முகாம் தமிழ் சங்கத்தில் நேற்று நடந்தது.மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லுாரி தலைமை மருத்துவர் சரவணன் தலைமையிலான எட்டு டாக்டர்கள், மூத்த குடிமக்களுக்கு பரிசோதனை செய்தனர்.பல் பராமரிப்பு, சிகிச்சைமுறைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.மூத்த குடிமக்களுக்கு மவுத் வாஷ் பேஸ்ட் அடங்கிய கிட் வழங்கப்பட்டது.முகாமில் 100க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை சங்க தலைவர் தேவநாதன், பொதுச் செயலாளர் வேணுகோபால், செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். செயலாளர் செல்வராசு நன்றி கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.