பட்டணப் பிரவேசம் நடத்த முதல்வர் வாய்மொழி உறுதி: தருமபுரம் ஆதீனம் பேட்டி

பட்டணப் பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக உறுதியளித்ததாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம் நடத்த முதல்வர் உறுதி அளித்ததாக தெரிவித்தார். அவர் “பட்டணப் பிரவேசம் நடத்துவதற்கு முதலமைச்சர் வாய்மொழியாக உறுதியளித்துள்ளார். முக்கியப் பிரமுகர்கள் வருவதால் அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
Dharmapuram Athena Expressed His Appreciation And Congratulations To Chief  Minister Stalin | மயிலாடுதுறை: தமிழ்நாடு முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த தருமபுரம்  ஆதீனம்!
வருகிற 22-ஆம் தேதி பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்த பல்வேறு ஆதீன குருமார்கள் திட்டமிட்டு அறிவித்திருந்தனர். தருமபுரம் ஆதீனத்தின் பட்டணப் பிரவேச நிகழ்வு தொடர்பாக முதல்வரை பேரூர் ஆதீனம் சந்தாலிங்கம மருதாசல அடிகளார், சிவகங்கை குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், விழுப்புரம் மாவட்டம் மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் மயிலாடுதுறை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் நேற்று சந்தித்தனர். முதல்வருடன் தொடர் ஆலோசனை நடந்து வரும் நிலையில், அவர் பட்டணப்பிரவேசம் நடத்த வாய்மொழி உறுதி அளித்ததாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.