#திருவண்ணாமலை || மனமுடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மனமுடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் காலனி பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ரவிச்சந்திரன்(48). இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் உறவினருக்கு திருமணம் என்பதால் நகை வாங்குவதற்கு நேற்று மனைவி குமாரி ஆரணிக்கு சென்றுள்ளார். அப்பொழுது ரவிச்சந்திரன் நாளும் வருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் மனைவி குமாரி நீங்கள் வர வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதனால் மனம் உடைந்த ரவிச்சந்திரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ரவிச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.