இதில் மறைந்திருக்கிற விலங்கைக் கண்டுபிடிச்சா நிஜமாவே நீங்க ஜீனியஸ்தான்!

Optical Illusion game: ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்’ என்ற வாசகத்தை பலரும் கேள்விப் பட்டிருப்பீர்கள். இது சம்பவங்களுக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படத்துக்கும் பொருந்தும்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நமது கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பக் கூடியவை. தெளிவடையும்போது மீண்டும் குழப்பி நம்மை மிரளச் செய்பவை. அதனால்தான், சவாலான புதிர்களை தேடிச்செல்லும் நெட்டிசன்களை ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஈர்த்து வருகின்றன.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் வேடிக்கையானது மட்டுமல்ல நெட்டிசன்களை கவர்ந்து ஈர்க்கக்கூடியது. இந்த படத்தில் ஒரு விலங்கு மறைந்திருக்கிறது. அது என்ன விலங்கு என கண்டுபிடிக்க வேண்டும் இதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கான சவால். மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிப்பதற்குள் நீங்கள் உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளப் போகிறீர்கள் பாருங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் முதன்முதலில் 2019 இல் பகிரப்பட்டிருந்தாலும், இதனுடைய என்றென்றைக்குமான புதிர் தன்மையால், இன்றும் எல்லோரையும் சவால் விட்டு கவர்ந்து ஈர்த்துவருகிறது. இந்த படத்தை டாக்டர் மிச்செல் டிக்கின்சன் என்பவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளர். “நீங்கள் உங்கள் தலை முடியை பிச்சிகொண்டால் மட்டுமே மறைந்திருக்கும் விலங்கை கண்டுபிடிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

எப்படி பார்த்தாலும் இந்த படம் கோடுகோடாக மட்டும்தானே தெரியுது, விலங்கைக் காணோமே என்று திகைத்துப்போய் நிற்கிறீர்களா? சரி, நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

இதில் ஒரு பூனை இருக்கிறது. ஒரு சிலர் படத்தில் மறைந்திருக்கும் பூனையைப் பார்க்கும் வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். மற்றொரு நெட்டிசன், “உங்கள் செல்போனை உங்கள் வெகு தொலைவில் வைத்து பாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

என்ன உங்களால் பூனையின் உருவத்தைப் பார்க்க முடிந்ததா? நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால், உங்களுக்கு உதவ ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை பெரிதாக்கினால் போதும். படம் சிறியதாகும்போது, ​​பூனை படம் தெரியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.