ஜேர்மன் உருக்காலையில் விபத்து… திரைப்பட காட்சி போல வழிந்தோடும் உருகிய உலோகம்



ஜேர்மன் உருக்காலை ஒன்றில் நடந்த விபத்து ஒன்றில், உருகிய எஃகு, எரிமலைக் குழம்புபோல வழிந்தோடும் காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இரும்புத் தாதுவிலிருந்து எஃகு தயாரிக்கப்படும் அந்த உருக்காலையில், உருகிய எஃகு இருந்த உலோக பாத்திரம் ஒன்று சேதமடைந்ததால், அதிலிருந்து உருகிய எஃகு கொட்டியுள்ளது.

டெர்மினேட்டர் என்னும் ஆங்கிலத் திரைப்படத்தில் வரும் காட்சி போல, அந்த உருகிய உலோகம் எரிமலைக் குழம்பு போல தரையில் வழிந்தோடுவதைக் காணலாம்.

ஆனால், இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பாதிப்புக்குள்ளானது ஒரு சைக்கிள் மட்டுமே. உலோகம் வழிந்தோடும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அந்த சைக்கிள் தீப்பற்றி எரிவதையும் வெளியாகியுள்ள வீடியோவில் காணமுடிகிறது.

அந்த வீடியோவில் கவனத்தை ஈர்த்துள்ள விடயம் என்னவென்றால், விபத்து ஏற்பட்டு அந்த உலோகம் வழிந்தோடும்போதும், அங்கு பணி புரியும் பணியாளர்கள் யாரும் பரபரப்படைந்து ஓடவில்லை, அவர்கள் நிதானமாக அங்கிருந்து நடந்து செல்வதைப் பார்க்க ஆச்சரியமாகத்தான் உள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.