“ஜோ பைடனால் முடியும்போது, என்னாலும் முடியும்..!" – குஜராத்தில் தேர்தல் களம்காணும் 76 வயது வேட்பாளர்

குஜராத் சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் 1, 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரசாரம் செய்துவருகின்றனர். பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் குஜராத்தில் முகாமிட்டிருக்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியும் பம்பரமாகச் சுழன்று தேர்தல் பிரசாரம் செய்துவருகிறார். இந்த நிலையில், குஜராத்தின் வதோதராவிலுள்ள மஞ்சல்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் யோகேஷ் படேல், எட்டாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வயது வரம்பு 75 என பா.ஜ.க வரையறுத்திருக்கிறது. ஆனாலும், 76 வயதான யோகேஷ் படேலை தேர்தல் வேட்பாளராக அறிவித்திருக்கிறது.

குஜராத் தேர்தல்

இளைய தலைமுறையினருக்கு வழிவிடாமல் இவர் தொடர்ந்து போட்டியிடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், செய்தியாளர்களிடத்தில் பேசிய யோகேஷ் படேல், “என்னைப் பொறுத்தவரை, வயது என்பது எண்ணிக்கை மட்டுமே. நான் என்னை இளமையாகவே மனதளவில் உணர்கிறேன். இப்போது, ​​ஜோ பைடனைக் கவனியுங்கள். அவர் 80 வயதில் முழு அமெரிக்காவையும் நிர்வகித்து வருகிறார். ஜோ பைடனால் முடிகிறது என்றால் என்னாலும் முடியும். 20 வயதுக்குட்டவர்கள்தான் வீட்டில் சும்மா இருப்பார்கள். 32 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருக்கும் நான், முழு மனதுடன் மக்களுக்காக உழைத்து வருகிறேன்

பாஜக

மேலும், நான் தேர்தலில் தோல்வியுற்றபோதும் மக்களுடன், நெருங்கிய தொடர்பிலிருந்தேன். அதனால், மக்களிடம் எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. என்னுடைய தொகுதியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழக்க நேரிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். டிசம்பர் 8-ம் தேதி முடிவுக்காக காத்திருங்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.